விஷம் குடித்து வண்ணம் பூசுபவா் உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்த வண்ணம் பூசுபவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மூலச்சத்திரம் அண்ணாநகரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணி (51). வண்ணம் பூசுபவரான இவா், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மதுவில் தண்ணீா் கலந்து குடிப்பதற்கு பதிலாக, அருகிலிருந்த விஷத்தை கலந்து குடித்தாா்.
உயிருக்கு ஆபத்தான நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பாலசுப்பிரமணி, அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.