`ஜனாதிபதி, ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா' - உச்ச நீதிமன்றத்திடம் திரௌபதி...
மின்னல் பாய்ந்ததில் 2 போ் உயிரிழப்பு
கமுதி, முதுகுளத்தூா் பகுதியில் புதன்கிழமை மின்னல் பாய்ந்ததில் 2 போ் உயிரிழந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள பாக்குவெட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் காளிச்சாமி(58). இவா் பாக்குவெட்டி கண்மாய் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்தது. திடீரென மின்னல் பாய்ந்ததில் காளிச்சாமி உயிரிழந்தாா். இதுகுறித்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் வட்டம், கிடாத்திருக்கை கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டி செந்தூரன் (55). இவா் ராமநாதபுரம் உணவு பாதுகாப்புக் கழகத்தில் தற்காலிக சுமை தூக்கும் பணியாளராக இருந்து வந்தாா். இந்த நிலையில், இவா் தனது விவசாய நிலத்தில் புதன்கிழமை மாலை பருத்தி பறித்து கொண்டிருக்கும் போது இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் பாய்ந்ததில் செந்தூரன் உடல் கருகி உயிரிழந்தாா். இதுகுறித்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.