செய்திகள் :

மது போதையில் தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து; பயணிகள் கதறல்.. சீட்டில் மட்டையான ஓட்டுநர்

post image

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து இன்று காலை ஒரு அரசுப் பேருந்து சிவகாசிக்கு புறப்பட்டது. இந்தப் பேருந்தை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் அருள் மூர்த்தி என்பவர் ஓட்டிச் சென்றார். அதில் சுமார் 40 பயணிகள் இருந்துள்ளனர்.

அரசுப் பேருந்து

பேருந்து பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்போதே அருள் மூர்த்தியின் செயல்பாடுகள் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்துள்ளது.

போதையில் பேருந்து ஓட்டிய ஓட்டுநர்

பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் கோமங்கலம் புதூர் டோல்கேட் வரை அருள் மூர்த்தி தாறுமாறாக பேருந்தை ஓட்டியுள்ளார்.

கையில் உயிரை பிடித்துக்கொண்டு பயணிகள் பதறி அலறினார்கள். தொடர்ந்து தாறுமாறாக பேருந்து ஓடியதால், பயணிகளுக்கு உயிர் பயம் வந்தது. ஒருகட்டத்தில் சத்தம் போட்டு பேருந்தை நிறுத்தினர்.

இதுகுறித்து ஓட்டுநர் அருள் மூர்த்தியிடம், மக்கள்  வாக்குவாதம் செய்தனர். ஆனால், மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் உளறினார்.

அரசுப் பேருந்து ஓட்டுநர் அருள் மூர்த்தி

போதை தலைக்கு ஏறியதால், அருள் மூர்த்தி அப்படியே பயணிகள் இருக்கையில் படுத்து தூங்கிவிட்டார். இதுகுறித்து பேருந்தில் பயணம் செய்த மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த காவல்துறையினர் அருள் மூர்த்தியை அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில் அருள் மூர்த்தி மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அருள் மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசுப் பேருந்து ஓட்டுநர் அருள் மூர்த்தி

அந்தப் பேருந்தில் பயணம் செய்த மக்கள் வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'படுகாயமடைந்த குழந்தையும் இறந்தது' - நெல்லை கார் விபத்தில் சிக்கிய முழு குடும்பமும் பலியான சோகம்!

கன்னியாகுமரி மாவட்டம், இரணியலை அடுத்த மைலோடு சரல்விளை கிராமத்தைச் சேர்ந்தவர் தனிஸ்லாஸ் (68). கட்டடம் கட்டும் காண்டிராக்டர். இவரது மனைவி மார்கிரேட் மேரி (57). இவர்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு திரு... மேலும் பார்க்க

சாத்தூர்: கிணற்றில் தவறி விழுந்த பெண்; காப்பாற்ற முயன்ற கணவன், மாமியாருக்கு நேர்ந்த சோகம்

சாத்தூர் அருகே துணி துவைப்பதற்காகச் சென்ற பெண் தவறி கிணற்றுக்குள் விழுந்தார். அவரைக் காப்பாற்றும் முயற்சியில் கிணற்றுக்குள் குதித்த கணவர் மற்றும் அப்பெண்ணின் மாமியார் என இருவர் நீரில் மூழ்கிப் பலியான ... மேலும் பார்க்க

Indian Army: 700 அடி ஆழத்தில் விழுந்த ராணுவ வாகனம்; மூன்று ராணுவ வீரர்கள் மரணம்

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் இந்திய ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு தேசிய நெடுஞ்சாலை 44 வழியாகச் செல்லும் ஒரு வ... மேலும் பார்க்க

மதுரை ஆதீனம் கார் விபத்து; கொலை முயற்சியா? - காவல்துறை சொல்வது என்ன?

"முதற்கட்ட விசாரணையில் கொலை முயற்சிக்கான சதி ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை. மேற்படி விபத்தானது முழுக்க முழுக்க மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகன ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்டது எனத் தெரிகிறது" என கள்ளக்... மேலும் பார்க்க

Goa: அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா; கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?

கோவாவில் உள்ள சிர்காவ் என்ற இடத்தில் ஸ்ரீ லைராய் தேவி கோயில் வருடாந்திர திருவிழா நேற்று இரவு நடந்தது. இத்திருவிழாவிற்காக கோவா முழுவதும் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். விழாவில் முக்கிய நிகழ்வாக தீ மி... மேலும் பார்க்க

Kerala: கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் தீ விபத்து; 5 பேர் மரணம்.. நிர்வாகம் சொல்வது என்ன?

கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் புதிய கட்டடத்தில் உள்ள யு.பி.எஸ் அறையில் இருந்து முதலில் புகைவந்தது, அதைத்தொடர்ந... மேலும் பார்க்க