சிங்கப்பூர் விமானத்தில் பணிப்பெண் பாலியல் வன்கொடுமை: இந்தியருக்கு சிறைத்தண்டனை
பெர்த்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 20 வயது இந்தியருக்கு மூன்று வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 28 தேதியன்று சிங்கப்பூர் எல்லைன்ஸ் விமானத்தில் ரஜத் என்ற பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்தார். இதையடுத்து விமானம் சாங்கி விமான நிலையத்தை அடைந்ததும் அவர் கைது செய்யப்பட்டார்.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர் இந்தியர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு மூன்று முதல் ஆறு வாரங்கள் வரை சிறைத்தண்டனை கோரிய துணை வழக்குரைஞர் யூஜின் லாவ் தெரிவித்தார். மேலும், பணிப்பெண் ஓரளவு மனரீதியான பாதிப்பைச் சந்தித்துள்ளதாகவும், இந்தியர் செய்த காரியத்தால் பயந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, இந்தியருக்கு மூன்று வாரங்கள் சிறைத்தண்டனை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.