ஆன்லைனில் நோ்காணல் நடத்தி வேலை தருவதாக பணமோசடி: 14 போ் கைது!
ஆர்சிபி அணியுடன் மீண்டும் இணைந்த வெளிநாட்டு வீரர்கள்!
ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெளிநாட்டு வீரர்கள் அந்த அணியுடன் மீண்டும் இணைந்துள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால், வெளிநாட்டு வீரர்கள் அவர்களது நாடுகளுக்குத் திரும்பினர். இதற்கிடையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் முடிவுக்கு வர, ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் மே 17 முதல் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது.
இதையும் படிக்க: ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வு பெற்றதால் அச்சமடையத் தேவையில்லை: முன்னாள் இந்திய வீரர்
ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் நாளை மறுநாள் (மே 17) முதல் தொடங்கவுள்ளதால், வெளிநாட்டு வீரர்கள் பலரும் தங்களது அணியுடன் மீண்டும் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் டிம் டேவிட் மற்றும் ரோமாரியோ ஷெப்பர்டு, ஜேக்கோப் பெத்தேல், லியம் லிவிங்ஸ்டன் மற்றும் பில் சால்ட் ஆகியோர் மீண்டும் ஆர்சிபி அணியுடன் இணைந்துள்ளனர்.
நாளை மறுநாள் (மே 17) பெங்களூருவில் நடைபெறவுள்ள போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடவுள்ள நிலையில், வெளிநாட்டு வீரர்கள் பலரும் ஆர்சிபி அணியுடன் மீண்டும் இணைந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ஆர்சிபி அணியுடன் ரோமாரியோ ஷெப்பர்டு மீண்டும் இணைந்துள்ள போதிலும், அவர் எத்தனை போட்டிகளில் விளையாடுவார் என்பது தெரியவில்லை. அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் (மே 21 - மே 25) மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான (மே 29-லிருந்து) மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அவர் இடம்பெற்றுள்ளதால், ஆர்சிபி அணிக்காக எத்தனை போட்டிகளில் விளையாடுவார் என்பது உறுதியாக தெரியவில்லை.
இதையும் படிக்க: இங்கிலாந்து அணியின் ஆலோசகராக டிம் சௌதி நியமனம்!
இங்கிலாந்து வீரர்களில் பில் சால்ட் ஐபிஎல் தொடர் நிறைவடையும் வரை ஆர்சிபி அணியில் இடம்பெறுவார் எனத் தெரிகிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் பில் சால்ட் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான டி20 தொடர் ஜூன் 6 முதல் தொடங்குவதால், ஆர்சிபி அணிக்காக பில் சால்ட் விளையாடுவதில் பெரிய அளவில் பிரச்னை ஒன்றுமில்லை.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர்களில் விளையாட இருப்பதால், ஜேக்கோப் பெத்தேல் ஆர்சிபி அணிக்காக இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளார். அதனால், ஆர்சிபி அணிக்காக இறுதிக்கட்டப் போட்டிகளில் அவர் விளையாட மாட்டார்.
Morphers activated. Our are back.
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 15, 2025
Right on time and ready to strike! ⚡ pic.twitter.com/ExyTQBYshD
!
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 15, 2025
More grit, more grind, and all gas no brakes, when it’s go time! #PlayBold#ನಮ್ಮRCB#IPL2025pic.twitter.com/fSMrySp8nG
ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் லுங்கி இங்கிடி இருவரும் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோதவுள்ளதால், அவர்கள் இருவரும் ஆர்சிபி அணிக்காக மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.