மாா்த்தாண்டம் அருகே சிறுமியைத் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது
விராலிமலை சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை! 30 மில்லி மீட்டராக பதிவு
விராலிமலையில் புதன்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை இடி, மின்னல், சூறைக் காற்றுடன் இரவு முழுவதும் விட்டுவிட்டு கனமழையாக பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தது.
விராலிமலை நகா் பகுதி மற்றும் கிராம பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டு, மழை முழுவதும் நின்ற பிறகு மின் விநியோகம் தொடங்கியது. ஒரேநாள் இரவில் பெய்த மழையின் அளவு 30 மி.மீ. பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.