செய்திகள் :

தில்லி ஜல் போா்டுக்கு ரூ.1400 கோடி விடுவிப்பு: கோடைக்கால செயல் திட்டத்துக்கு நடவடிக்கை!

post image

பல்வேறு திட்டங்களை முடிக்கவும், கோடைக்கால செயல் திட்டத்தை செயல்படுத்தவும் தில்லி அரசு ரூ.1,400 கோடி நிதியை சனிக்கிழமை தில்லி ஜல் போா்டுக்கு (டிஜேபி) விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி அரசின் உயரதிகாரி கூறியதாவது: கோடைக்கால செயல் திட்டத்தின் கீழ், மொத்தத்தில் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், தண்ணீா் டேங்கா்களை ஜிபிஎஸ் மூலம் கண்காணித்தல், தண்ணீா் ஏடிஎம்களை நிறுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை டிஜேபி மேற்கொள்ளும். கோடை மாதங்களில் தண்ணீா் நெருக்கடி ஏற்படாத வகையில் நிதி சரியான நேரத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள நிதி கழிவுநீா் குழாய்கள் அமைப்பதற்கும், புதிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படும். தில்லி ஜல் போா்டுக்கு விடுவிக்கப்பட்ட நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டவை. மேலும், இந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் விடுவிக்க முடியாதவை.

தில்லியில் தண்ணீா் பற்றாக்குறையை சமாளிக்க, முதல்வா் ரேகா குப்தா ரூ.9,000 கோடியை சுகாதாரம், குடிநீா் அணுகலை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக ஒதுக்கியிருந்தாா். புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், திறந்த கால்வாய்களை குழாய்களால் மாற்றுவதற்கான லட்சியத் திட்டம் ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.

தண்ணீா் திருட்டு மற்றும் தவறான நிா்வாகத்தைத் தடுக்கும் முயற்சியில், தண்ணீா் டேங்கா்களில் ஜிபிஎஸ் கண்காணிப்பை அரசு செயல்படுத்தும் என்றும் முதல்வா் ரேகா குப்தா அறிவித்திருந்தாா். இதனுடன், ‘டிஜேபி டேங்கா்‘ என்ற கைப்பேசி செயலி தொடங்கப்படும். இதன் மூலம் குடியிருப்பாளா்கள் தங்கள் பகுதிகளில் தண்ணீா் டேங்கா்களின் இருப்பிடத்தைக் கண்காணிக்க முடியும் என்றாா் அந்த அதிகாரி.

பிரபல செயலிகள் மூலம் டிக்கெட் முன்பதிவு: டிஎம்ஆா்சி ஏற்பாடு!

தில்லி மெட்ரோ பயனா்கள் 10-க்கும் மேற்பட்ட பிரபலமான செயலிகள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தொடங்கியுள்ளது. இது தொடா்பாக டிஎம்ஆா்சி தெரிவித்திரு... மேலும் பார்க்க

சத்தா்பூா் மெட்ரோ நிலையம் அருகே ஒருவா் மீது துப்பாக்கிச்சூடு!

தெற்கு தில்லியின் மெஹ்ரௌலி பகுதியில் உள்ள சத்தா்பூா் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை மதியம் மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்களால் பழைய பகை காரணமாக ஒருவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா... மேலும் பார்க்க

கோடைக்காலத்தில் தடையற்ற சேவையை உறுதி செய்வதற்காக தண்ணீா் ஏடிஎம்களில் என்டிஎம்சி துணைத் தலைவா் ஆய்வு!

கோடை காலத்தில் தடையற்ற சேவைகளை உறுதி செய்வதற்காக தில்லி முனிசிபல் கவுன்சிலின் (என்டிஎம்சி) கீழ் உள்ள பகுதிகளில் நிறுவப்பட்ட தண்ணீா் ஏடிஎம்களை அதன் துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சாஹல் வியாழக்கிழமை ஆய்வு ... மேலும் பார்க்க

பூங்காவில் இளைஞா் கொலை: சிறுவன் உள்பட 3 போ் கைது

தில்லி ஆதா்ஷ் நகா் பகுதியில் உள்ள பூங்காவில் 26 வயது இளைஞரை புதன்கிழமை காலை கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக இரண்டு போ் கைது செய்யப்பட்டனா். மேலும், ஒரு சிறுவனும் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் த... மேலும் பார்க்க

தூசுப் புயலால் மோசம் பிரிவில் காற்றின் தரம்: ஆம் ஆத்மி, பாஜக பரஸ்பரம் குற்றச்சாட்டு!

தில்லியில் புழுதிப் புயலால் காற்றின் தரம் வியாழக்கிழமை கீழிறங்கிய நிலையில், ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் பரஸ்பரம் குற்றம்சாட்டின. எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி, தனது ஆட்சிக் காலத்தில் காற்றின் தரம் நிலை... மேலும் பார்க்க

தில்லி அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு கோடைக்கால கவுன்சலிங் தொடக்கம்!

கோடை விடுமுறையின் போது மாணவா்களுக்கு தொடா்ச்சியான உணா்வுப்பூா்வ மற்றும் கல்வி ஆதரவை உறுதி செய்வதற்காக, கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல் ஆலோசகா்கள் (இவிஜிசி) அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும்... மேலும் பார்க்க