செய்திகள் :

10, 11 ஆம் வகுப்புகளுக்கு துணைத் தேர்வு எப்போது?

post image

10, 11 ஆம் வகுப்புகளுக்கு ஜூலை 4 ஆம் தேதி முதல் துணைத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.

சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முடிவுகளை வெளியிட்டார்.

அப்போது செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர், “10, 11 ஆம் வகுப்புகளுக்கு ஜூலை 4 ஆம் தேதி முதல் துணைத் தேர்வு நடைபெறும். துணைத் தேர்வு அட்டவணை நாளை(மே 17)” வெளியிடப்படும்” என்றார்.

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியாகியுள்ள நிலையில், 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள் பிற்பகல் 2 மணிக்கு தெரிந்துகொள்ளலாம்.

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கையில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 98.31% மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிக்க: திட்டமிட்டப்படி ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ்

திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களில் இனறு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். மேலும் பார்க்க

'2026 மட்டுமல்ல 2031, 2036-லும் திமுக ஆட்சிதான்' - முதல்வர் மு.க. ஸ்டாலின்

2026 தேர்தல் மட்டுமல்ல, 2031, 2036 தேர்தல்களிலும் தமிழ்நாட்டில் திமுகதான் ஆட்சி அமைக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். உதகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 16) காலை நடைபயிற்சி மேற்கொ... மேலும் பார்க்க

பிரபல சினிமா தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!

சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை... மேலும் பார்க்க

10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு: 17-ஆவது இடத்தைப் பிடித்த திருப்பூர்!

திருப்பூர்: 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 94.84 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 17-ஆவது இடத்தைத் திருப்பூர் மாவட்டம் பிடித்துள்ளது.தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வ... மேலும் பார்க்க

தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட அதிகம் பெய்ய வாய்ப்பு!

தென்மேற்குப் பருவமழை இயல்பை விட அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் தென்காசி வெதர்மேன் ராஜா தகவல் தெரிவித்துள்ளார். தென்மேற்குப் பருவக்காற்று என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் இன்றியம... மேலும் பார்க்க

பாப்பான்விடுதி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்!

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதியில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் தீரத்துடன் அடக்கி வருகின்றனர்.ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதி முத... மேலும் பார்க்க