வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மே 16 - 22) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
தன்னம்பிக்கையுடன் முடிவுகளை எடுப்பீர்கள். உடனிருப்போரின் ஆதரவு உண்டு. யோகா, தியானத்தைக் கற்பீர்கள். திறமைகளுக்கேற்ப அணுகுமுறைகளை மாற்றுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கவனமாக இருக்கவும். விவசாயிகள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கலைத் துறையினர் பயணங்களால் வருவாய் காண்பீர்கள். பெண்கள் குடும்பத்தினரை அரவணைத்துச் செல்வீர்கள். மாணவர்கள் நன்றாகப் படிப்பீர்கள்.
சந்தராஷ்டமம் - இல்லை.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
காரியங்களில் நெருக்கடி ஏற்படாது. மதிப்பு உயரும். நீண்ட நாள் பிரச்னை முடிவுக்கு வரும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.
உத்தியோகஸ்தர்கள் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். வியாபாரிகள் விற்பனையில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். விவசாயிகளுக்கு புழு, பூச்சிகளால் பாதிப்பு இருக்காது.
அரசியல்வாதிகள் திறமைக்கேற்ப பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் பிறர் எண்ணங்களுக்கேற்ப செயல்படுவீர்கள். பெண்கள் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - மே 16, 17.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
புதிய தொழில் செய்யத் தொடங்குவீர்கள். நண்பர்களைப் பற்றிய எண்ணங்களை மாற்றிக் கொள்வீர்கள். புதிய கருவிகளை வாங்குவீர்கள். உடன்பிறந்தோரிடம் அனுசரித்து நடப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைத் திறம்பட செய்வீர்கள். வியாபாரிகள் சிறிய முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகள் புதிய முறைகளில் பயிர் செய்வீர்கள்.
கலைத் துறையினருக்கு உடனிருப்போரின் ஆதரவு உண்டு. பெண்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். மாணவர்கள் தங்களது பழக்க, வழக்கங்களை மாற்றிக் கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - மே 18, 19.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை அறிவீர்கள். உற்சாகத்துடன் காரியமாற்றுவீர்கள். தொழிலில் அனுபவஸ்தர்களின் ஆலோசனை கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு கடன் கிடைக்கும். வியாபாரிகள் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கலைத் துறையினர் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெண்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - மே 20, 21, 22.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
குடும்பத்தில் அமைதி நிலவும். சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். புதிய பாதையில் பயணிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் கனிவுடன் நடப்பீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் உடல் சோர்வை மறந்து, கடுமையாக உழைப்பீர்கள். கலைத் துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெண்கள் ஆன்மிகத்திலும், தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். மாணவர்களின் கோரிக்கைகளை பெற்றோர் நிறைவேற்றுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
குடும்பப் பொறுப்புகளை விருப்பமுடன் ஏற்பீர்கள். உறவினர்களை அனுசரித்து நடப்பீர்கள். பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் குறையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரிகளுக்கு வாராக் கடன் வசூலாகும். விவசாயிகளின் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி கிடைக்கும். கலைத் துறையினர் உயர்ந்தோர்களைச் சந்திப்பீர்கள். பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
பலவித எண்ணங்கள் மனதில் தோன்றும். பொது காரியங்களில் விவேகமாக இருப்பீர்கள். வழக்குகளில் வாய்தா கிடைக்கும். குடும்பத்துடன் கேளிக்கைகளில் பங்கேற்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களின் உழைப்புக்கு பலன் உண்டு. வியாபாரிகள் மன உறுதியுடன் செயல்படுவீர்கள். விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
அரசியல்வாதிகள் புதியவர்களைக் கட்சியில் சேர்ப்பீர்கள். கலைத் துறையினருக்கு புகழ் அதிகரிக்கும். பெண்கள் இறைவழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் படிப்பில் சாதனைகளைப் படைப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய வாய்ப்புகளை அளிக்கும். ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக ரீதியான பயணம் நன்மையை அளிக்கும். வியாபாரிகளின் பிரச்னைகள் தீர்வு அடையும். விவசாயிகள் கொள்முதலில் லாபம் அடைவீர்கள்.
அரசியல்வாதிகள் மக்கள் பணியில் கவனத்துடன் இருப்பீர்கள். கலைத் துறையினருக்கு பண வரவு உண்டு. பெண்கள் குடும்பத்துடன் கேளிக்கைகளில் பங்கேற்பீர்கள். மாணவர்கள் படிப்பில் சாதனை படைப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
பிரச்னைகள் குறையும். பிறர் கருத்துகளை அறிந்து முடிவெடுப்பீர்கள். விலகிய உறவினர்கள் குடும்பத்துடன் இணைவார்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுக்கு உதவுவார்கள். வியாபாரிகள் மன உறுதியுடன் செயல்பட்டு வருமானத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளைத் திறம்பட ஆற்றுவீர்கள். கலைத் துறையினருக்கு நண்பர்கள் உதவுவார்கள். பெண்கள் மனக் குழப்பங்களில் விடுபடுவீர்கள். மாணவர்கள் சக மாணவர்களுக்கு உதவுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். பொருளாதாரம் சிறக்கும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். விவசாயிகளுக்கு கொடுக்கல், வாங்கல் சிறப்பான பலன்களைக் கொடுக்கும். விவசாயிகளின் பொருள்களுக்கு நல்ல மதிப்பு கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு வெற்றி கிடைக்கும். கலைத் துறையினர் திறமைகளால் மதிக்கப்படுவீர்கள். பெண்களுக்கோ உறவினர்களால் குடும்ப ஒற்றுமை மேம்படும். மாணவர்கள் பெற்றோர்களுக்கு கட்டுப்படுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
உடல் ஆரோக்கியமும், மன வளமும் சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணங்களைச் செய்வீர்கள். புதுவிதச் சிந்தனைகள் தோன்றும். போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களின் வேலைகளைப் பிறர் பகிர்வார்கள். வியாபாரிகள் வருமானத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களைக் கட்டுக்குள் வைப்பீர்கள். கலைத் துறையினருக்கு நண்பர்கள் தக்க நேரத்தில் உதவுவார்கள். பெண்களுக்கு மனக் குழப்பங்கள் நிலவும். மாணவர்கள் படித்து முன்னேறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
பிறரது குறைகளைப் பெரிதுபடுத்த மாட்டீர்கள். சூழ்நிலைகளுக்கேற்ப செயல்களை மாற்றிக் கொள்வீர்கள். பூர்விக சொத்துகள் கிடைக்கும். புதிய கண்ணோட்டம் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்களுக்கு இரட்டிப்பு உயர்வு உண்டு. வியாபாரிகள் திட்டமிட்ட வேலைகளை நிறைவேற்றுவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு மதிப்பு மரியாதை உயரும். கலைத் துறையினர் பணவரவில் உயர்வைக் காண்பீர்கள். பெண்களுக்கு ஆன்மிக நாட்டம் மேலோங்கும். மாணவர்கள் நற்பெயரை எடுப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.