பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு புதிய ரிலீஸ் தேதி..! துணை முதல்வரானப் பிறகு முதல் படம்!
பவன் கல்யாண் நடித்துள்ள ஹரி ஹர வீர மல்லு படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் முக்கியமான நடிகராக இருக்கும் பவன் கல்யாண் தனது ஜன சேனா கட்சியை 2014-இல் துவக்கி, தற்போது ஆந்திரத்தின் துணை முதல்வராக உயர்ந்துள்ளார்.
பவன் கல்யாண் நடிப்பில் 3 படங்கள் (ஹரி ஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங், ஓஜி) வெளியாகாமல் தாமதிக்கப்பட்டு வருகின்றன.
அதில் ஹரி ஹர வீர மல்லு படத்தின் படப்பிடிப்பு லட்டு பிரச்னையின் போது மீண்டும் துவக்கப்பட்டு விரைவாக முடிக்கப்பட்டன.
கிறிஸ் ஜகர்லமுடி, ஜோதி கிருஷ்ணா இணைந்து இயக்கும் ஹர ஹர வீரமல்லு படத்தின் அப்டேடினை தயாரிப்பாளர் மெகா சூர்யா புரடக்ஷன்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.
இந்தப் படம் மே.9ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருந்தது தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், ஜூன் 12ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கடைசியாக 2023-இல் ப்ரோ படம் வெளியானது. துணை முதல்வரான பிறகு வெளியாகும் முதல் படமென்பதால் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
