சூரியின் உருக்கமான பேச்சைக் கேட்டேன்: ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் சூரியின் பேச்சு குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது முழுநேர நாயகனாக மாறியிருக்கிறார் சூரி.
விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் எனும் படத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார்.
லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
படத்தின் புரமோஷனுக்காகச் சென்றபோது சூரி தனது கடந்தகால வாழ்க்கையை அழுதுகொண்டே கூறியது அனைவரையும் நெகிழச் செய்தது. இது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியதாவது:
சூரி சகோதரரே, நீங்கள் உங்களது சொந்த மண்ணில் மாமன் பட முன் வெளியீட்டு விழாவில் உருக்கமாக பேசியதைப் பார்த்தேன். உங்களது உணர்ச்சிகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
திரைத்துறையில் சாதிக்க நினைக்கும் அனைவருக்கும் நீங்கள் முன்மாதிரி. மாமன் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும். உங்களது படக்குழுவிற்கும் உங்களுக்கும் எனது வாழ்த்துகள். எனது ஆதரவு உங்களுக்கும் எப்போதும் இருக்கும். மாமன் படத்தை அனைவரும் திரையரங்குகளில் பாருங்கள் எனக் கூறியுள்ளார்.