பொதுத் தோ்வுகளில் சாதிக்கும் கெக்கரக்கல்வலசு அரசு மேல்நிலைப் பள்ளி!
சென்னை: தன்பாலின ஈர்ப்பு செயலி மூலம் அறிமுகம்; டிரைவரால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!
வடசென்னையைச் சேர்ந்தவர் ராஜேஷ் (பெயர் மாற்றம்). 26 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவரின் அப்பா ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். உறவினர் வீட்டின் திருமணத்துக்காக ராஜேஷ் குடும்பத்தினருடன் பெங்களூரு சென்றார். பின்னர் அவர் மட்டும் வீடு திரும்பினார். வீட்டில் தனியாக இருந்த ராஜேஷ், தன்பாலின சேர்க்கையாளர்களுக்கான செயலி மூலம் ஏற்கெனவே தனக்கு அறிமுகமான ஜெயந்தி நாதன் என்பவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது, 'வீட்டில் நான் மட்டும் தனியாக இருக்கிறேன், வந்தால் சந்தோஷமாக இருக்கலாம்' என்று கூறியிருக்கிறார். அதற்கு பதிலளித்த ஜெயந்தி நாதன், என்னோடு ஃப்ரெண்ட்ஸ் இருக்கிறார்கள். அதனால் தனியாக வர முடியாது. அவர்களையும் வீட்டுக்கு அழைத்து வரட்டுமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு ராஜேஷ் சம்மதிக்க, அன்றைய தினம் இரவு 11 மணிக்கு மேல் ஆட்டோவில் ஜெயந்தி நாதனும் அவருடைய நண்பர் ஐயப்பன், அவரின் தோழியான 17 வயது சிறுமி ஆகியோர் ராஜேஷ் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்.

பின்னர் ராஜேசும் ஜெயந்தி நாதனும் ஒர் அறைக்கு சென்றிருக்கிறார்கள். ஐயப்பனும் 17 வயது சிறுமியும் இன்னொரு அறையில் இருந்திருக்கிறார்கள். இந்தச் சமயத்தில் ராஜேஷை ஜெயந் திநாதன் திடீரென கயிற்றால் கட்டத் தொடங்கினார். பின்னர் ஐயப்பன், சிறுமி ஆகியோரும் சேர்ந்து ராஜேஷை அங்கிருந்த கழிவறைக்குள் போட்டு பூட்டினர். அதன் பிறகு ராஜேஷிடம் நகைகள், பணம் எங்கு இருக்கிறது என கேட்டு அதையும் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து ஜெயந்தி நாதன், ஐயப்பன், சிறுமி ஆகியோர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். கழிவறைக்குள் சிக்கிக் கொண்ட ராஜேஷ், தன்னுடைய செல்போன் மூலம் வீட்டின் உரிமையாளருக்கு நள்ளிரவில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து ராஜேஷை வீட்டின் உரிமையாளர் மீட்டு விவரம் கேட்டிருக்கிறார். பின்னர் ராஜேஷ், எம்.கே.பிநகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் ஜெயந்தி நாதன், ஐயப்பன், சிறுமி ஆகியோரைப் பிடித்த போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் ஜெயந்தி நாதன், ஐயப்பன் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த வழக்கில் சிறுமிக்கு தொடர்பு இருப்பதால் அவரை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்க போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள்.