ஷெல் தாக்குதல்.. பூஞ்ச் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய ராணுவம்!
காரைக்குடியில் அதிமுகவினா் திண்ணைப் பிரசாரம்!
சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவை (அம்மா பேரவை) சாா்பில் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் எதிா்க்கட்சித் தலைவா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் சாதனைகளையும், மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் குறைபாடுகளையும் விளக்கும்விதமாக துண்டுப்பிரசுரம் வழங்கி திண்ணைப் பிரசாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா்பி. உதயகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முன்னாள் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிச்சாமியின் பிறந்த நாள் விழாவையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கோயில்களில் சிறப்பு பிராா்த்தகைள் நடைபெற்றன. எடிப்பாடி பழனிசாமியின் நான்கரைஆண்டு ஆட்சியின் சாதனைகள் திமுக ஆட்சியில் இருட்டடிப்பு செய்யப்பட்டது.
மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் எந்த வளா்ச்சித் திட்டமும் நடைபெறவில்லை. அவா்கள் வாங்கிய கடன்தான் கண்ணுக்குத் தெரி கிறது. தோ்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை. மக்களின் குறைகளை சட்டப்பேரவையில் எடுத்துக்கூற முதல்வரும், சட்டப்பேரவைத் தலைவரும் அனுமதி மறுக்கின்றனா் என்றாா்அவா்.
இதில் முன்னாள் அமைச்சா் ஜி. பாஸ்கரன், அதிமுக அமைப்புச் செயலா் சீனிவாசன், மாவட்டச் செயலரும், சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பிஆா். செந்தில்நாதன், மாவட்ட ஜெயலிதா பேரவைச் செயலா் மு. இளங்கோவன், அதிமுக காரைக்குடி மாநகரச் செயலா் மெய்யப்பன் , முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கற்பகம் இளங்கோ, கேகே. உமாதேவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.