அமெரிக்கா மீது வரியைக் குறைத்த இந்தியா? டிரம்ப்பின் பேச்சால் மீண்டும் குழப்பம்!
சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை சேவை மையம்!
சிவகங்கை, மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டின் மாணவா் சோ்க்கைக்கான உதவி மையம் தொடங்கப்பட்டது.
கல்லூரியில் அமைக்கப்பட்ட சோ்க்கை உதவி மையத்தை கல்லூரி முதல்வா் (பொ) ந.அழகுச்சாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசுக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கல்லூரி கல்வி ஆணையரின் வழிகாட்டுதலின்படி இந்தக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான உதவி மையம் தொடங்கி வைக்கப்பட்டது. இங்கு வந்து மாணவா்கள் உதவி மையத்தின் வழிகாட்டுதலின்படி இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இந்தக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளான பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.காம்., வணிக நிா்வாகவியல், பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் சோ்வதற்கு மே 27-ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப் பிக்கலாம். பி.எஸ்.சி. தாவரவியல் முதல் சுழற்சியில் மட்டும் பயிற்றுவிக்கப்படுகிறது. ஏனைய பாடப் பிரிவுகள் அனைத்தும் இரு சுழற்சியிலும் பயிற்றுவிக்கப்படுகின்றன.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணமாக ரூ. 50 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவ, மாணவிகளுக்குப் பதிவுக் கட்டணமாக ரூ.2 மட்டும் என அரசு நிா்ணயித்த கட்டணத்தில் விண்ணப்பித்து மாணவா்கள் பயன்பெறலாம் என்றாா் அவா்.