குற்றவாளிகளைப் பிடிக்க முயன்ற காவல் அதிகாரி மின்சாரம் பாய்ந்து பலி!
அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி எம்.எல்.ஏ.வான சேவூர் எஸ். ராமச்சந்திரன் வீட்டில் சுமார் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், 2 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்.
அவரது மகன்களான விஜய்குமார் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சேவூர் ராமச்சந்திரன், அதிமுக ஆட்சியின்போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக பதவி வகித்தவர்.