NEP: `தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை' - அன்பில் மகேஷ் எழுதிய புத்தகத்தை ...
பாடி மேம்பாலம் அருகே டிப்பர் லாரி மோதியதில் தாய், குழந்தை பலி!
சென்னை: சென்னை பாடி மேம்பாலம் அருகே, டிப்பர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண்ணும் குழந்தையும் பலியான நிலையில், பெண்ணின் கணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டிப்பர் லாரி ஏறி இறங்கியதில், பெண் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானதகாவும், படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானதாகவும் கூறப்படுகிறது.
இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சரவணன், அருகில் உள்ள மருத்துவமனையில் படுகாயத்துடன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
விபத்து நடந்த இடத்தில், போக்குவரத்துக் காவலர்களுடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.