சாத்தான்குளம் அருகே கிணற்றில் பாய்ந்த ஆம்னி வேன்: 5 பேரும் பலி
மாமன், டிடி நெக்ஸ்ட் லெவல் முதல்நாள் வசூல் எவ்வளவு?
மாமன், டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படங்களின் முதல்நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூரியின் மாமன், சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் ஆகிய திரைப்படங்கள் நேற்று (மே. 16) திரையரங்குகளில் வெளியானது.
இரண்டு திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளதால் ரசிகர்களிடம் போதுமான வரவேற்பைப் பெறாது என்றே தெரிகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் முதல் நாள் வசூலாக டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் ரூ. 2.5 கோடியையும் சூரியின் மாமன் ரூ. 1.6 கோடியும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: லைகாவை மிஞ்சிய முதலீடு... யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்?