மீண்டும் நடிப்பிற்குத் திரும்பிய எமி ஜாக்சன்!
நடிகை எமி ஜாக்சன் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.
தமிழில் மதராசப்பட்டினம் திரைப்படத்தில் தன் நடிப்புத் திறனால் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தவர் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன். விக்ரமுடன் ‘ஐ’ படத்தில் சிறப்பக நடித்து பெரிதாகக் கவனிகப்பட்டார்.
மேலும், சில படங்களில் நடித்தவர் ஜார்ஜ் பனாயியோடௌவை திருமணம் செய்துகொண்டு ஆண் குழந்தைக்குத் தாயானார் எமி ஜாக்சன். எனினும், கருத்து வேறுபாட்டால் இவர்கள் இருவரும் கடந்த 2021-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
தொடர்ந்து, அவரும் ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கும் காதலித்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்த இணைக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இதனால், குழந்தையைக் கவனிக்க ஓராண்டாக சினிமாவில் நடிப்பதை எமி ஜாக்சன் தவிர்த்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஹாலிவுட் படமொன்றில் நடிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பதிவிட்டவர், “என் மகன்களைப் பிரிந்து வேலைக்குச் செல்வது கஷ்டமாகவும் எப்போது திரும்பி மீண்டும் மகன்களைப் பார்ப்பேனோ என ஏக்கமாகவும் இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: ஆண்டவரே என்ன இது... புலம்பும் சிம்பு ரசிகர்கள்!