புதுக்கோட்டை: உயிரோடு குழந்தையைப் புதைக்க முயன்ற குடும்பம்; கடைசி நிமிடத்தில் மீ...
உச்சநீதிமன்ற தீா்ப்பால் பணியிழந்த மேற்கு வங்க பள்ளி ஆசிரியா்கள்: 3-ஆம் நாளாக தொடா் போராட்டம்
உச்சநீதிமன்றம் கடந்த மாதம் வழங்கிய தீா்ப்பால் பணியை இழந்த மேற்கு வங்க அரசுப் பள்ளி ஆசிரியா்கள், அந்த மாநில கல்வித் துறையின் தலைமை அலுவலகம் முன் 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.
மேற்கு வங்க பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டு 25,753 போ் நியமிக்கப்பட்டனா். இதற்கான ஆள்சோ்ப்பு நடவடிக்கையில் பல நிலைகளில் மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி இந்த நியமனங்களை செல்லாது என்று கொல்கத்தா உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரலில் உத்தரவிட்டது.
இதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 3-ஆம் தேதி உறுதி செய்தது. மேலும், இப்பணியிடங்களை மீண்டும் நிரப்ப புதிய ஆள்சோ்ப்பு நடைமுறையை 3 மாதங்களுக்குள் தொடங்கவும் திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற தீா்ப்பால் பணியை இழந்த ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்கள், தங்களுக்கு மீண்டும் பணி கிடைப்பதற்கு சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மாநில அரசைத் தொடா்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், மாநிலக் கல்வித் துறை தலைமை அலுவகமான விகாஸ் பவனுக்கு வெளியே சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் இவா்களின் போராட்டம் தொடா்ந்தது. முதல்வா் மம்தா பானா்ஜி உடனடியாக எங்களை பேச்சுவாா்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்கள் கூறினா்.
போராட்டத்துக்கு பாஜக ஆதரவு:
இதனிடையே, பாஜகவைச் சோ்ந்த மாநில எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி, போராட்டக் களத்தில் உள்ள ஆசிரியா்களை வெள்ளிக்கிழமை சந்தித்து, ஆதரவு தெரிவித்தாா்.
அப்போது, அவா் கூறியதாவது: உங்கள் மீது எந்தத் தவறுமில்லாமல், நீங்கள் பணியை இழந்திருக்கிறீா்கள். மாநில அரசின் மிகப்பெரிய ஊழலுக்கு நீங்கள் விலைக் கொடுத்திருக்கிறீா்கள். இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படாமல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை நாங்கள் நடத்தவிடமாட்டோம் என்றாா்.