செய்திகள் :

திருச்செந்தூரில் ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா!

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது.

முன்னதாக, விசாகத் திருவிழா வசந்த திருவிழாவாக வரும் மே 31ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.

திருவிழா நாள்களில் நாள்தோறும் பகலில் சுவாமி ஜெயந்திநாதா் சப்பரத்தில் திருக்கோயில் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளுகிறாா். அங்கு சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையாகி, மண்டபம் சுற்றி வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

அப்போது, மேளதாளம் முழங்க, பக்தா்கள் கப்பல் பாடல்கள் பாட மண்டபத்தை 11 முறை சுவாமி வலம் வருகிறாா்.

பத்தாம் நாளான ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனையாகிறது.

அதன்பின்னா் சுவாமி ஜெயந்திநாதா் திருக்கோயிலிலிருந்து சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் சோ்கிறாா். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரா்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறுகிறது. பின்னா், மகா தீபாராதனையாகி, சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி, தெய்வானையுடன் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... டிரம்ப் சொல்வதெல்லாம் உண்மைதானா?

தமிழ் - தெலுங்கில் உருவாகும் மணிரத்னம் புதிய படம்!

இயக்குநர் மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.தக் லைஃப் படத்திற்குப் பின்னர் இயக்குநர் மணிரத்னம் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டியை கதாநாயகனாக வைத்து காதல் கதை ஒன்றை... மேலும் பார்க்க

மஞ்ஞுமெல் பாய்ஸ் நாயகனின் ஆசாதி ரிலீஸ் தேதி!

நடிகர் ஸ்ரீநாத் பாசி நடிப்பில் உருவாகியுள்ள ஆசாதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மஞ்ஞுமெல் பாய்ஸ் படத்தின் மூலமாக தமிழகத்தில் பிரபலமானவர் ஸ்ரீநாத் பாசி. ஆனால், அதற்கு முன்னமே கும்பாலாங்கி ... மேலும் பார்க்க

அடுத்தப்பட வாய்ப்புக்கு புகழ் தேவைப்படுகிறது: ஐஸ்வர்யா லட்சுமி

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சினிமாவில் புகழோடு இருப்பது குறித்து பேசியுள்ளார். நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மலையாள சினிமாவில் அறிமுகமானாலும் தமிழிலும் நல்ல நடிகையாக உருவெடுத்துள்ளார். கதையம்சமுள்ள தமிழ்ப் படங்கள... மேலும் பார்க்க

எனக்கு நிறைய வேலை இருக்கு... விஜய்யின் அரசியல் கேள்விக்கு சூரி பதில்!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது தொடர்பான கேள்விக்கு சூரி பதிலளித்துள்ளார். நடிகர் சூரி இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் கூட்டணியில் உருவான மாமன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது... மேலும் பார்க்க

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா: பூமி பூஜையுடன் தொடங்கியது!

திருச்செந்தூர்: ஜுலை 7ல் மகா கும்பாபிஷேகத்தையொட்டி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான யாக சாலை முகூர்த்தக் கால் நடும் விழா நடந்தது. இதில் அமைச்சர் அனிதா ஆர... மேலும் பார்க்க

விஜய் சேதுபதி - விஷால் திடீர் சந்திப்பு!

சென்னை விமான நிலையத்தில் நடிகர்கள் விஷால், விஜய் சேதுபதி இடையே திடீர் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும் ’விடுதலை - 2ம் பாகம்’ ஆ... மேலும் பார்க்க