GBU - இளையராஜா விவகாரம்: "ஜி.வி.பிரகாஷ் 7 கோடி வாங்குறதுல கங்கை அமரனுக்கு இதான் ...
விராட் கோலிக்காக சின்னசாமி திடலை வெண்மையாக்கிய ரசிகர்கள் ஏமாற்றம்!
பெங்களூரு ரசிகர்களின் நெகிழ்ச்சியான செயல் குறித்து ஐபிஎல் நிர்வாகம் விடியோ வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 58-ஆவது போட்டி நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி திடலில் ஆர்சிபி-கேகேஆர் அணிகளுக்கு இடையே நடைபெற இருந்தது.
இந்தப் போட்டிக்காக விராட் கோலி ரசிகர்கள் வெள்ளை நிற ஜெர்ஸிக்களை அணிந்து வந்தார்கள்.
சமீபத்தில் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனால், கோலியை கௌரவிக்கும் பொறுட்டு வழக்கமான ஆர்சிபியின் சிவப்பு நிற ஜெர்ஸியை அணியாமல் வெள்ளை நிறத்தில் அணிந்து வந்தார்கள்.
ரசிகர்கள் கோலியின் ஆட்டத்தை பார்க்க மிகுந்த ஆவலில் இருந்தார்கள். ஆனால், மழைக் குறுக்கிட்டதால் டாஸ் சுண்டப்படாமலேயே போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
விராட் கோலி ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் சின்னசாமி திடலை விட்டுச் சென்றார்கள்.
சின்னசாமி திடலை வெண்மை நிறமாக்கிய ஆர்சிபி ரசிகர்களின் அன்பை விடியோவாக வெளியிட்டு ஐபிஎல் நிர்வாகம் பதிவிட்டுள்ளது. இந்த விடியோவை ஆர்சிபி, கோலி ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகிறார்கள்.
இந்தப் போட்டியில் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டதால் கேகேஆர் தொடரிலிருந்து வெளியேறியதும், ஆர்சிபி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்குச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.
Painting the M. Chinnaswamy in white
— IndianPremierLeague (@IPL) May 18, 2025
A fitting salute to the legacy of the legendary Virat Kohli #TATAIPL | #RCBvKKR | @RCBTweets | @imVkohlipic.twitter.com/NnQuJvdjbQ