ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ்!
டு பிளெஸ்ஸியைப் போலவே பேட்டிங் செய்த சிராஜ்..! வைரலாகும் விடியோ!
குஜராத் வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸி போலவே பேட்டிங் செய்த சிராஜ் விடியோ வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 18-ஆவது சீசனில் 58 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை எந்த அணியும் பிளே ஆஃப்ஸுக்கு தகுதிபெறவில்லை. இருப்பினும் ஆர்சிபி, குஜராத் அணிகள் முன்னிலை வகிக்கின்றன.
குஜராத் டைட்டன்ஸ் அணியும் தில்லி கேபிடல்ஸ் அணியும் இன்றிரவு (மே.18) மோதவிருக்கிறது.
இதற்கான பயிற்சியில் தில்லி கேபிடல்ஸ் வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸி ஈடுபட்டு வரும்போது குஜராத் வீரர் சிராஜ் அவரைப் போலவே பின்புறம் நின்று பேட்டிங் செய்வார்.
இந்த விடியோவை குஜராத் டைட்டன்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
குஜராத் தில்லியை வென்றால் குஜராத், ஆர்சிபி தகுதிபெறும். தில்லி வென்றாலும் உடன் பஞ்சாப் வென்றாலும் எந்த அணியுமே பிளே ஆப்ஸுக்கு இன்று தகுதிபெற முடியாது என்பதால் இந்தப் போட்டி முக்கியமானதாக இருக்கிறது.
தில்லி அணி இந்தப் போட்டியில் வெல்லாவிட்டால் பிளே ஆப்ஸுக்கான தொடரில் இருந்து வெளியேறும் என்பதால் அந்த அணிக்கு குஜராத்தை விடவும் முக்கியமான போட்டியாக இருக்கிறது.
Mirror mirror on the wall, who’s the Faf-est of them all? pic.twitter.com/q38piREMsy
— Gujarat Titans (@gujarat_titans) May 17, 2025