செய்திகள் :

அன்பான ரசிகர்களுக்கு நன்றி: ரூ.235 கோடி வசூலித்த ரெட்ரோ!

post image

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படத்தின் வசூல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 'ரெட்ரோ' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

2 டி என்டர்டெய்ன்மென்ட் - ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முதல் வார இறுதியில் உலகம் முழுவதிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினருக்கு வைர மோதிரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உலகம் முழுவதும் ரூ.230 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

ரெட்ரோ படத்தினை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு படக்குழு நன்றியைத் தெரிவித்துள்ளது.

நடிகர் சூர்யா சினிமா வாழ்க்கையில் அதிகபட்சமாக வசூலித்த திரைப்படமாக இந்தப்படமே இருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் பூஜா ஹெக்டேவின் நடிப்பும் சந்தோஷ் நாராயணன் இசையும் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பொன் அலை வீசும் மலையாள திரைத்துறையில் சமரசமற்ற ஒரு கமர்ஷியல் படம்: ஆசிப் அலி

மலையாள நடிகர் ஆசிப் திரைத்துறைக்கு 2009 -இல் அறிமுகம் ஆனாலும் அவரது வளர்ச்சி படிப்படியாகவே நிகழ்ந்துள்ளது. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தலவன், லெவல் கிராஸ், அடியோஸ் அமிகோ, கிஷ்கிந்தா... மேலும் பார்க்க

வாடிவாசல் எதிர்பார்ப்புகளுக்கு நான் பொறுப்பல்ல: வெற்றி மாறன்

வாடிவாசல் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளுக்கு இயக்குநர் வெற்றி மாறன் பதிலளித்துள்ளார். நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் வாடிவாசல் திரைப்படம் உருவாகவுள்ளது. மறைந்த எழுத்தாளர் சி.ச... மேலும் பார்க்க

விக்ரம் டிரைலர் சாதனையை முறியடித்த தக் லைஃப் டிரைலர்!

தக் லைஃப் திரைப்படத்தின் டிரைலர் யூடியூபில் டிரெண்டிங்கில் உள்ளது. நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படத்தின் டிரைலர் நேற்று (மே. 17) வெளியானது.இந்த டிரைலரில் த... மேலும் பார்க்க

மண்டோதரியாக காஜல் அகர்வால்!

ராமாயணம் திரைப்படத்தில் மண்டோதரி கதாபாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 'பவால்’, ‘சிச்சோரே’ ஆகிய படங்களை இயக்கிய நிதிஷ் திவாரி, தற்போது ராமாயணம் படத்தை இயக்கிவருகிறார... மேலும் பார்க்க

லீக் 1 தொடர்: 13-ஆவது முறையாக சாம்பியனான பிஎஸ்ஜி!

லீக் 1 கால்பந்து தொடரில் பிஎஸ்ஜி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.பாரிஸ் செயின்ட் ஜெர்மன் எனப்படும் பிஎஸ்ஜி கால்பந்து அணி லீக் 1 கால்பந்து தொடரின் கடைசி போட்டியில் ஆக்செர்ரே உடன் மோதியது. இந்தப் போட்டிய... மேலும் பார்க்க

துருக்கி, அஜர் பைஜானில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்: இந்தியத் திரைப்பட அமைப்பு

திரைப்பட படப்பிடிப்புகளைத் துருக்கி, அஜர் பைஜானில் நடத்த வேண்டாம் என இந்தியத் திரைப்பட அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டது. இதனால், எல... மேலும் பார்க்க