புதிய போப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் பங்கேற்பது யார்?
மண்டோதரியாக காஜல் அகர்வால்!
ராமாயணம் திரைப்படத்தில் மண்டோதரி கதாபாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'பவால்’, ‘சிச்சோரே’ ஆகிய படங்களை இயக்கிய நிதிஷ் திவாரி, தற்போது ராமாயணம் படத்தை இயக்கிவருகிறார். மிக பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யஷ் நடிக்கின்றனர்.
இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகவுள்ளன.
இந்தப் படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் யஷுக்கு ரூ. 200 கோடி சம்பளம் தரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை ரூ. 200 கோடி வாங்கினால், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அதிக சம்பளம் பெற்ற சாதனையைப் படைப்பார்.
இந்தப் படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து ஆஸ்கர் வென்ற பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் பணியாற்றவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் மண்டோதரி கதாபாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: துருக்கி, அஜர் பைஜானில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்: இந்தியத் திரைப்பட அமைப்பு