இரவில் 31 மாவட்டங்களுக்கு மழை! வானிலை மையம் வெளியிட்ட செய்தி!
லீக் 1 தொடர்: 13-ஆவது முறையாக சாம்பியனான பிஎஸ்ஜி!
லீக் 1 கால்பந்து தொடரில் பிஎஸ்ஜி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
பாரிஸ் செயின்ட் ஜெர்மன் எனப்படும் பிஎஸ்ஜி கால்பந்து அணி லீக் 1 கால்பந்து தொடரின் கடைசி போட்டியில் ஆக்செர்ரே உடன் மோதியது.
இந்தப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 84 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்த பிஎஸ்ஜி கோப்பையை வென்றது.
அணி வீரர்கள், ரசிகர்கள் இதனை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக லீக் 1 தொடரில் பிஎஸ்ஜி கோப்பையை வென்றது. இந்தத் தொடரில் இது மொத்தமாக 13-ஆவது சாம்பியன் பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அரையிறுதியில் வென்ற பிஎஸ்ஜி அணியின் பயிற்சியாளர், “நாங்கள் லீக்கின் விவசாயிகள்தான். பிரீமியர் லீக்கின் நான்கு அணிகளையும் வென்றுள்ளது நன்றாக இருக்கின்றது" எனக் கூறினார்.
உலகின் டாப் 5 கால்பந்து தொடர்களாக அறியப்படும் பிரிமீயர், லா லீகா, புன்டெஸ்லிகா, சீரிஸ் ஏ, லீக் 1 தொடர்களில் மிகவும் புகழ் குறைந்ததாக இருந்தது லீக்1 தொடர். இதில் விளையாடும் அணிகளை லீக் ஆஃப் தி பார்மர்ஸ் (லீக்கின் விவசாயிகள்) என கிண்டல் செய்வார்கள்.
இந்தத் தொடர்களில் விளையாடுவர்கள் காலையில் விவசாயம் பார்த்துவிட்டு மாலையில் கால்பந்து விளையாடுவது போல இருப்பதாக ரசிகர்கள் கிண்டல் செய்வதைக் குறிப்பிட இந்த வார்த்தை புகழ்ப்பெற்றது.
இந்த லீக் 1 கால்பந்து தொடரில் பிஎஸ்ஜி அணி ஆதிக்கம் செலுத்துவதால் அந்த அணியை “லீக் ஆஃப் தி பார்மர்ஸ்” என கால்பந்து ரசிகர்கள் கிண்டல் செய்வார்கள்.
சாம்பியன் லீக்கில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள பிஎஸ்ஜி அணியினருக்கு இந்த வெற்றி மேலும் ஊக்கத்தை அளித்திருக்கும்.
« CHAMPIONS MON FRÈRE » pic.twitter.com/lBJcy4b7BL
— Paris Saint-Germain (@PSG_inside) May 17, 2025
Une belle soirée ensemble au Parc ! ❤️#PSGAJA | #Ligue1pic.twitter.com/vyu2351y84
— Paris Saint-Germain (@PSG_inside) May 17, 2025