ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ்!
துருக்கி, அஜர் பைஜானில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்: இந்தியத் திரைப்பட அமைப்பு
திரைப்பட படப்பிடிப்புகளைத் துருக்கி, அஜர் பைஜானில் நடத்த வேண்டாம் என இந்தியத் திரைப்பட அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டது. இதனால், எல்லைப் பகுதிகளில் இன்னும் போர் பதற்றம் குறையவில்லை. இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு துருக்கி, அஜர் பைஜான் நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இதனைக் கண்டிக்கும் விதமாக, அந்நாடுகளுக்கு இந்திய திரைப்படங்களின் படப்பிடிப்பை நடத்த வேண்டாம் என்றும் இங்கு பணிபுரியும் அந்நாட்டு தொழில்நுட்ப கலைஞர்களின் விசாக்களை ரத்த செய்யவும் அனைத்திந்திய திரைப்படத் தொழிலாளர்கள் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து, மத்திய அரசிற்கு கடிதம் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரிய பட்ஜெட் படங்களின் முக்கியமான மற்றும் பாடல் காட்சிகள் துருக்கியில் படமாக்கப்பட்டு வருகின்றன.
நடிகர் அஜித் குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் அஜர் பைஜானில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தமிழ் - தெலுங்கில் உருவாகும் மணிரத்னம் புதிய படம்!