Marriage Dance: கணவர் அபிஷேக் பச்சன், மகளுடன் சேர்ந்து வைரல் நடனமாடிய ஐஸ்வர்யா ராய்
மும்பையில் நடந்த திருமணம் ஒன்றில் அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராய் இருவரும் தங்கள் மகள் ஆராத்யாவுடன் கலந்துகொண்டனர். திருமணத்தில் பாடகர் ராகுல் வைத்யா இசை நிகழ்ச்சியை நடத்தினார். அப்பாடல்களை விரும்பிக்கேட்ட ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் மற்றும் ஆராத்யா ஆகியோர் மேடைக்குச் சென்றனர்.

பாடகர் ராகுல் வைத்யா பாடிய கஜிரா ரே என்ற பாடலுக்கு மூன்று பேரும் மிகவும் மகிழ்ச்சியுடன் நடனம் ஆடினர். அதனைப் பார்த்து திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். மூன்று பேரும் பாடலுடன் கூடிய நடனத்தில் பங்கேற்றது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனை மணமக்கள் மேடைக்கு வரவழைத்து நடனமாட வைத்தனர். இதிலும் ஆராத்யா கலந்து கொண்டார். ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் 1999ம் ஆண்டு முதல் முறையாக படப்பிடிப்பில் சந்தித்துக்கொண்டனர். அதன் பிறகு அவர்களுக்கு நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார். அதன் பிறகு புதிய படம் எதிலும் கமிட் ஆகவில்லை.