Maanan: "பலே பாண்டியா... அப்படிச் சொல்வதற்குத் துணிச்சல் வேண்டும்" - சூரியைப் பு...
ஏ.ஆர்.ரஹ்மானும் ஹான்ஸிம்மரும் ராமாயணம் கதைக்கு இசையமைக்கிறார்களா? - தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்
பாலிவுட் இயக்குநர் நிதீஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதை திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தை தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தயாரிக்கவிருக்கிறார்.
இப்படத்திற்கு 'ராமாயண்' என தலைப்பு வைத்து சமீபத்தில் அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.

2026-ல் முதல் பாகம், 2027-ல் இரண்டாம் பாகம் என இரண்டு பாகங்களாக வெளியிடப்போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள்.
படத்தில் ராமனாக ரன்பீர் கபூரும், ராவணனாக யஷ்ஷும், சீதையாக சாய் பல்லவியும் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
தற்போது படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், ஹாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மரும் இணைந்து இசையமைக்கவிருப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா அப்டேட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.
இத்திரைப்படம் தொடர்பாக, "இப்போது ராமாயணா படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறேன். அது இந்தியக் கலாச்சாரத்தின் முக்கியமான கதை. அப்படத்தை எடுக்க வேண்டும் என்பது எனக்கு கனவு.

நான் தயாரிக்கும் இந்த 'ராமாயண்' படத்திற்கு இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இசையமைக்கவிருக்கிறார். இவருடன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்து இசையமைக்கவிருக்கிறார்.
ஏ.ஆர். ரஹ்மான் பல முக்கியமான இந்திய திரைப்படங்களுக்கும், ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். இவர்கள் இருவரும் முதல் முறையாக இணைந்து இசையமைக்கவிருக்கிறார்கள்.
ஒரு ரசிகனாக எனக்கு இது கனவு நனவான தருணம்," எனக் கூறியிருக்கிறார்.