செய்திகள் :

`அந்த தம்பிய திரும்ப மீட் பண்ணினேன்; அப்போ, சொன்னான்..!’ - Neeya Naana வீரசெல்வி பேட்டி

post image

ஒரு மனிதனுக்குள் இருக்கும் சாதிவெறி என்பது, தீயை விட ஆபத்தானது. அது, எத்தனை பேரை தீக்கிரையாக்கும் என்பதே தெரியாது. ஆனால், அந்த சாதியத் தீயை 'நீயா நானா?'வில் தனது அறிவார்ந்த விவாதத்தால் ஊதி அணைத்து, ‘இதுதான் உண்மையான வீரம்’ என வெற்றி வாகைச் சூடியிருக்கிறார், பெயருக்கேற்றார்போலவே, உண்மையான ‘வீராதி’ வீரசெல்வி.

“சின்ன வயசிலேர்ந்து ரத்தத்தில ஊறினது” என்ற சிறுவனிடம், “ரத்தத்துல எப்படி தன்னால ஊறும்? இதெல்லாம் அசிங்கம்டா தம்பி” எனக்கூறி, ‘என் சாதிப்பெருமையை பேசும்போது மீசையை முறுக்கணும்னு தோணும். கண்ணுல ஒரு திமிரு, அகங்காரம் எல்லாமே தெரியும்.’ என்று பேசிய சிறுவனை ‘பிறப்பால் அனைவரும் சமம்’ என சொல்லவைத்திருக்கும் வீரசெல்வியைத்தொடர்புகொண்டு 'உங்களால் இப்படியொரு மாற்றம் நிகழ்ந்திருப்பதை நினைக்கும்போது எப்படி இருக்கு?" என்றோம்.

வீரசெல்வி

`திரும்ப மீட் பண்ணினேன்'

"என்னால அந்தத் தம்பி மாறிட்டான்னு முழு கிரெடிட்டையும் எடுத்துக்கமுடியாது. அவன் பேசின பிறகு, எல்லோரும் ட்ரோல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நாம ஏதோ தப்பா பேசிட்டோம்னு உணர ஆரம்பிச்சிருக்கான். ஏன்னா, அந்த வீடியோ உலகம் முழுக்க வைரல் ஆக ஆரம்பிச்சிடுச்சு. அவன், மாறினதுக்கு அதுவும் காரணம். அவனை இப்போ திரும்ப மீட் பண்ணினேன். 'நீங்க சொன்ன மாதிரியேதான்க்கா நடந்துச்சு. சாதி கட்சியில என்னை வேலைக்காக மட்டும்தான் பயன்படுத்திக்கிறாங்க. அங்கீகாரம் கொடுக்கமாட்றாங்க. வேலையை வாங்கிட்டு அனுப்பிடுறாங்க. எல்லாத்தையும் உணர்ந்துட்டேன்'னு ஃபீல் பண்ணி சொன்னான்.

அவனோட குடும்பம் சாதாரண கூலி வேலைக்கு போற குடும்பம்தான். இப்போதாவது, குடும்பத்தை பற்றிய புரிதலும், சமூகத்தைப் பற்றிய தெளிவும் வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம். என்ன ஒண்ணு, வீடியோவுல தமிழ்ச்செல்வி அக்காவாலதான் மாறினேன்னு சொன்னான். ஆனா, என் பேரை மாற்றி சொல்லிட்டான். என் பேரு தமிழ்ச்செல்வி இல்ல. வீரசெல்வி. எல்லாரும் தமிழ்ச்செல்வி… தமிழ்ச்செல்வின்னு வீடியோ போட ஆரம்பிச்சுட்டாங்க. நான் சாதி பற்றி ஒரு தெளிவோட இருக்கிறதுல எங்கம்மாவுக்கு சந்தோஷம்." என்றவர், தன்னோடு குடும்பம் பத்தி பேச ஆரம்பிக்கிறார்.

கண்கூடா பார்த்திருக்கேன்!

``நாங்க தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் பாளமுத்தி கிராமம். அப்பா, மதியழகன். பாதி பெரியாரிஸ்ட்டுன்னு சொல்லலாம். அவர் திமுகக்காரர். சாதியெல்லாம் பெருசா பார்க்கமாட்டார். எங்கம்மா குடும்பம் கிராமத்தில் தலைமை குடும்பம். அப்படிப்பட்டக் குடும்பத்தில் பிறந்த எங்கம்மாவும் பெருசா சாதியெல்லாம் பார்க்கமாட்டாங்க. அம்மா நிறைய பேருக்கு ஃபீஸ் எல்லாம் கட்டி ஹெல்ப் பண்ணியிருக்காங்க. அப்பாவும் அம்மாவும் அப்படி இருந்ததாலதான், எல்லோரும் மனிதர்கள்தான்; எல்லோரும் சமம்தான்ங்கிற புரிதல் வந்தது.

வீரசெல்வி

எங்க ஊருக்கு பேருந்து வசதிக்கூட கிடையாது. ஆனா, எங்க ஊர்ல பட்டியிலின மக்கள் தோளில் துண்டு போடக்கூடாது, காலில் செருப்பு போடக்கூடாதுன்னு சாதிக்கொடுமையெல்லாம் நிகழ்ந்துட்டிருக்கு. 100 ரூபாய் கூலி கொடுத்துட்டு 500 ரூபாய்க்கு வேலை வாங்குவாங்க. பத்து வயசு சிறுவன் 70 வயது முதியவரை பேரை விட்டு மரியாதை இல்லாம கூப்பிடுவான். இந்த சாதி ஆணவத்தையெல்லாம் கண்கூடா பார்த்திருக்கேன்.

என்னை மாதிரியே நிறையே பேரு வாழ்ந்துக்கிட்டிருக்காங்க!

இந்தமாதிரி சாதிக்கொடுமை பண்றவங்க எல்லாம் என்கூட நெருங்கிப் பழகினவங்களா இருந்திருக்காங்க, சொந்தக்காரங்களா இருந்திருக்காங்க. சாதிக் கொடுமையால அடக்குமுறைக்கு உள்ளாகிற மக்களுக்குத்தான் வலியும் வேதனையும் அதிகம். 'அவங்களை அடக்குமுறை பண்ணாதீங்க, அது தப்பு'ன்னு சொல்லக்கூடியவங்க எல்லா சாதியிலும் இருக்காங்க. அடக்குமுறை பன்ற கும்பலில் மனிதாபிமானமுள்ளவங்களும் இருப்பாங்க. அவங்களால வாயைக்கூட திறக்கமுடியாது. அப்படி வாயைத் திறக்கமுடியாம நானும் இருந்திருக்கேன்.

கிட்டத்தட்ட, ‘பரியேறும் பெருமாள்’ படத்துல வர்ற யோகிபாபு கேரக்டர் மாதிரிதான் நான் வாழ்ந்திருக்கேன். என்னை மாதிரியே நிறையே பேரு வாழ்ந்துக்கிட்டிருக்காங்க. நான் அமைதியா இருந்ததுக்காக, இப்போ எல்லோர்கிட்டேயும் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.

சாதியால, ஒரு புண்ணியமும் கிடையாது!

ஆனா, இப்போ எங்க உறவினர் பசங்க யாராவது, அடக்குமுறைக்குள்ளாகுறவங்களை பேரை விட்டு கூப்பிட்டா 'வாயை உடைச்சுடுவேன்'னு தைரியமா சொல்லுவேன். எங்க வீட்டுல, எங்க குடும்பத்துல, எங்க உறவினர்கள் எல்லாருமே நான் கடுமையா எதிர்ப்பேன்னு பயப்படுவாங்க. சாதியால, ஒரு புண்ணியமும் கிடையாது.

வீரசெல்வி

2016 –ல் என் அப்பா இறந்துட்டார். நான், என்ஜீனியரிங் படிச்சிருக்கேன். என்னுடைய தங்கச்சியும் என்ஜீனியரிங் படிச்சிருக்கா. எங்கம்மா ரெண்டு பேரையும் நல்லா படிக்க வெச்சிருக்காங்க. அம்மா மல்லிகா ப்ளஸ் டூ படிச்சிருக்காங்க. பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் காலேஜ்ல லேப் அசிஸ்டெண்டா ஒர்க் பண்ணிக்கிட்டிருக்காங்க. அப்பா இறந்தாலும் நாங்க படிச்ச கல்விதான் எங்களை வளர்த்துக்கிட்டிருக்கு. நான், இப்போ சென்னையில ஒர்க் பண்ணிக்கிட்டிருக்கேன். படிச்சாலே சாதியைப் பற்றின புரிதல் வரும். இந்த பிரபஞ்சத்துல நாம ஒரு துகள்தான் அப்படிங்கிறது புரிய வரும். அதனால, கல்விதான் நமக்கு ரொம்ப முக்கியம். அந்த தம்பிக்கு படிப்பு குறைவா இருக்கிறதாலதான் சமூகத்தைப் பற்றிய புரிதல் இல்லாம பேசிக்கிட்டிருந்தான்.

`படிப்பு ஒண்ணுதான் நம்மளை முன்னேற்றும்’

சமீபத்துல, ஒரு கட்சி மாநாடு நடந்துச்சு. 'நம்ம சாதியினர் படிக்கல. ஆட்சியாளர்கள் படிப்பை கொடுக்கல. வேலை கிடைக்காம கஷ்டப்பட்டுட்டுக் கிடக்குறாங்க'ன்னு அக்கட்சி தலைவர் பேசுறார். அதே மேடையில், 'நாங்க அக்னியிலருந்து பிறந்தவங்க'ன்னு சொல்லி சாதிவெறியையும் ஊட்டுறார். இப்படி சாதிவெறிய ஊட்டிக்கிட்டே இருந்தா, எப்படி படிக்கப் போவாங்க? 40 வருடமா சாதிவெறியை ஊட்டி ஊட்டி படிக்கவிடாம செஞ்சதே இந்தத் தலைவருங்கதான். அவங்க சுயநலத்துக்காக செய்யும் அரசியலை பெற்றோர்கள்தான் புரிஞ்சிக்கிட்டு பிள்ளைங்களை நல்லா படிக்கவெக்கணும். படிப்பு ஒண்ணுதான் நம்மளை முன்னேற்றும்.

தினகரன்

படிப்பு எவ்ளோ முக்கியம்ங்கிறதை தம்பி தினகரனும் புரிஞ்சுக்கிட்டான். எல்லோரும் ட்ரோல் பண்ணி பண்ணி அவனோட பாடி லாங்வேஜ் மாறிடுச்சு. ராஜ வம்சம்னு சொல்லிக்கிட்டிருந்தான். இப்போ, அவனோட தோரணை, ராஜவம்ச கெத்து எல்லாம் காணாம போயிடுச்சு. அதனால, அவனை பாராட்டி வரவேற்கணுமே தவிர, மீண்டும் ட்ரோல் பண்ணி அவன் மனசை காயப்படுத்தக்கூடாது. அதுதான், என்னோட விருப்பம். ப்ளீஸ் தயவு செஞ்சு இனியும் அவனை ட்ரோல் பண்ணாதீங்க.” என்கிறார், வீரசெல்வி.

"அம்மா கேரக்டருக்கு ஏன் ஹீரோயின் மாதிரி இருக்கணும்னு கேட்குறீங்க?" - 'சின்ன மருமகள்' கெளரி ஜானு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `சின்ன மருமகள்'. இந்தத் தொடரில் மோகனா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் கெளரி ஜானு. இவரை நம் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.`சின்ன மருமகள்'... மேலும் பார்க்க

பிரஜின்-சாண்ட்ரா: ரசிகைகள் கொண்டாடிய ஆங்கர்; டிவியின் முதல் Cute Couple |இப்ப என்ன பண்றாங்க? பகுதி 9

ஒரு காலத்தில் ஸ்கிரீனில் பிஸியாக இருந்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டவங்க இவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா, சூழ்நிலையா தெரியாது.இப்போது மேக் அப் ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார்கள்.‘இப்... மேலும் பார்க்க

`வேறென்ன வேணும் நீ போதுமே...!' - காதலியை கரம் பிடித்த `சுந்தரி' தொடர் நடிகர்

`சுந்தரி' தொடரின் மூலம் பலருக்கும்பரிச்சயமானவர் ஜிஷ்ணு மேனன். தற்போது சன் டிவியில் வரவிருக்கும் தொடர் ஒன்றிலும் இவர்நடிக்க இருக்கிறார். ஜிஷ்ணுவுக்கும்செலிபரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அபியாதிராவுக்கும் ... மேலும் பார்க்க

Thudarum: ``மௌன ராகம் மல்லிகாவ மக்கள் கொண்டாடுறாங்க" - நடிகை, தயாரிப்பாளர் சிப்பி ரஞ்சித் பேட்டி

'துடரும்’ படம் வெற்றி பெறும்னு தெரியும். ஆனால், இந்தளவுக்கு ஒரு மாபெரும் வெற்றி அடையும்னு எதிர்பார்க்கல. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுவும், தமிழ் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கிறாங்க!” - என உற்சாகத்தோடு பேச... மேலும் பார்க்க

"அழகர், புத்தர், எடப்பாடி பழனிசாமி, என் மகள்!" - அப்பா ஆன சந்தோஷத்தில் நாஞ்சில் விஜயன்

'கலக்கப் போவது யாரு','அது இது எது' போன்ற நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகர் நாஞ்சில் விஜயனுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.முன்னதாக கடந்த 2023 செப்டம்பர் மாதம் இவருக்கும் மரியா என்பவர... மேலும் பார்க்க

செய்தி வாசிப்புக்கு முன்னும் பின்னும்; இவ்ளோ செய்துள்ளாரா பாத்திமா பாபு? |இப்ப என்ன பண்றாங்க பகுதி 8

ஒரு காலத்தில் ஸ்கிரீனில் பிஸியாக இருந்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்ட வங்க இவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா, சூழ்நிலையா தெரியாது. இப்போது மேக் அப் ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார்கள். ‘... மேலும் பார்க்க