செய்திகள் :

Thudarum: ``மௌன ராகம் மல்லிகாவ மக்கள் கொண்டாடுறாங்க" - நடிகை, தயாரிப்பாளர் சிப்பி ரஞ்சித் பேட்டி

post image

'துடரும்’ படம் வெற்றி பெறும்னு தெரியும். ஆனால், இந்தளவுக்கு ஒரு மாபெரும் வெற்றி அடையும்னு எதிர்பார்க்கல. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுவும், தமிழ் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கிறாங்க!” - என உற்சாகத்தோடு பேச ஆரம்பிக்கிறார்கள், ரஞ்சித் - சிப்பி தம்பதியர்.

சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி 200 கோடி ரூபாய்க்குமேல் வசூலை வாரிக்குவித்து 'தொடர்' சாதனை செய்துகொண்டிருக்கும் 'துடரும்' படத்தின் தயாரிப்பாளர்கள்தான் ரஞ்சித்தும் அவரின் மனைவி நடிகை சிப்பியும்.

அதுவும், நடிகை சிப்பி 'மெளனராகம்' சீரியல் மூலம் மல்லிகாவாக ஏற்கெனவே, தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர். அதையும் தாண்டி சினிமா, வெப் சீரிஸ் என தொடர்ந்து சமூகம்; சென்டிமென்ட்; த்ரில்லர் பல ஜானர்களில் தயாரிப்பாளராகவும் வித்தியாசமான கதைகளை மக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார். அந்த வரிசையில், இப்போது 'துடரும்' படமும் இணைந்திருக்கிறது. வாழ்த்துகளுடன் ரஞ்சித் - சிப்பி சக்சஸ் ஜோடியிடம் பேசினேன். துடரும் வெற்றி.... சீரியல்... சினிமா... பர்சனல்.. என விகடனுக்காக மனம் திறந்தனர்.

மோகன்லால், தயாரிப்பாளர் ரஞ்சித்

"மோகன்லால் -ஷோபனா பல வருடங்களுக்குப்பிறகு இந்த படத்தின் மூலம் ஒண்ணு சேர்ந்திருக்காங்களே?"

“கதைதான் ரெண்டு பேரையும் மீண்டும் நடிக்க வெச்சதுன்னு சொல்லணும். 'துடரும்' ஸ்கிரிப்ட் 12 வருடங்களா எங்கக்கிட்ட இருக்கு. இதோட, கதாசிரியர் சுனிலுக்கு இதுதான் முதல் படம். எங்கக்கிட்ட வந்து ஸ்டோரி சொன்னார். ரொம்ப பிடிச்சுப்போச்சு. லாலேட்டன் மாதிரி, ஒரு பெரிய நடிகர் நடிச்சாதான் நல்லாருக்கும்னு தோணுச்சு. எங்களுக்கு மோகன்லால் சார் குடும்ப நண்பர்.

ஏற்கெனவே, அவரோட படங்களை தயாரிச்சிருக்கோம். என் மனைவியும் அவர்கூட நடிச்சிருக்காங்க. எங்கமேல அவருக்கு நல்ல மரியாதை இருக்கு. கதையைச் சொன்னோம். அவருக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. இன்னும் கொஞ்சம் மெருகூட்ட இயக்குநர்கள் தேடினோம்.

அஞ்சாறு பெரிய இயக்குநர்களைப் பார்த்தோம். அவங்க சொன்ன மாற்றங்கள் எங்களுக்குப் பிடிக்கல. அதனால, வெயிட் பண்ணிக்கிட்டே இருந்தோம். எங்கக்கிட்ட இப்படியொரு கதை இருக்குன்னு லாலேட்டனுக்கும் தெரியும். அப்படியே, வருடங்கள் போய்க்கிட்டிருந்துச்சு. அப்போதான், தருண் மூர்த்தி இயக்கின ‘செளதி வெள்ளக்கா’ பார்த்தோம். எமோஷனல் எல்லாமே கரெக்ட்டா கனெக்ட் பண்ணியிருந்தாங்க.

இந்தக் கதையிலும் ஃபேமிலி சென்டிமென்ட் இருக்கிறதால தருணைப் பார்த்தோம். அவர், மூன்று தடவை ஸ்கிரிப்டை சில இடங்களில் சேஞ்ச் பண்ணினார். அப்போதான், நாங்க எதிர்பார்த்தது வந்தது. இதுக்காகத்தான் இத்தனை நாள் வெய்ட் பண்ணிக்கிட்டிருந்தோம்னு ரொம்ப ஹேப்பி. லாலேட்டன்கிட்டே சொன்னதுமே, அடுத்த மாசமே ஷூட்டிங் போயிடலாம்னு சொல்லி எக்ஸைட்மென்ட்டை எங்களுக்கும் கடத்திட்டார்.

நடிகை ஷோபனா

லாலேட்டனுக்கு ஜோடியா யாரு செட் ஆகும்னு யோசிச்சப்போ ஷோபனா மேடம்தான் நினைவுக்கு வந்தாங்க. ஆனா, அவங்க புரோகிராம்ஸ்ல பிஸியா இருக்கிறதால, ஜோதிகா மேடத்தை அணுகி கதை சொன்னோம்.

சூர்யா சாரும் ஜோதிகா மேடமும் சேர்ந்துதான் கதை கேட்டாங்க. அவங்க ரெண்டு பேருக்குமே கதை ரொம்ப புடிச்சுப்போச்சு. ஆனா, விடுமுறைக்காக வெளிநாடு செல்லத் திட்டமிட்டிருந்ததால் எங்களோட தேதிகளில் அவங்களால நடிக்க முடியல. அதுக்கப்புறம்தான், திரும்பவும் ஷோபனா மேடத்தையே நடிக்க வைக்கலாம்னு முயற்சி எடுத்தோம்.

இதுக்கே, அவங்க இன்னொரு படத்துல நடிக்கவேண்டியிருந்தது. அதை, ஒதுக்கி வெச்சுட்டுதான் இந்த படத்துல கமிட் ஆனாங்க. அதுவும், லாலேட்டன் - ஷோபனா ஜோடிங்கிங்கிறது மலையாள ரசிகர்களோட ஃபேவரைட் ஜோடி. அவங்க ரெண்டு பேரையுமே ஒன்றிணைச்சதுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்” என்கிறார், ரஞ்சித்.

"ஒரு பக்கம் நல்ல சீரியல் நடிகையா கலக்கிக்கிட்டிருக்கீங்க, இன்னொரு பக்கம் 'லவ் அன்டர் கன்ஸ்ட்ரக்‌ஷன்', 'துடரும்' மாதிரி நல்ல கதைகளையும் தயாரிக்கிறீங்களே?" என நடிகை சிப்பியிடம் கேட்டபோது,

“எங்க ரெஜபுத்திரா புரொடொக்‌ஷன் கம்பெனி 35 வருடங்களா இருக்கு. பட தயாரிப்பு, விநியோகம், அவுட் டோர் யூனிட்டுன்னு எல்லாமே பண்ணிக்கிட்டிருக்கோம். இது, எங்களுடைய 14-வது படம். எல்லா கதையுமே நானும் கணவரும்தான் கேட்போம். எங்க படங்களை பார்க்கிறவங்களே, உங்கக் கதைகள் வித்தியாசமா இருக்குன்னு பாராட்டுறாங்க. அது, எங்களுக்கு கிடைச்ச அங்கீகரமா பார்க்கிறோம். அதேமாதிரி, எங்களுக்கு நல்ல டீமும் அமைஞ்சிருக்காங்க. இந்த 'துடரும்’ படத்துக்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய், ஒளிப்பதிவாளர் ஷாஜிகுமார்ன்னு மொத்த டீமும் முழு உழைப்பைக் கொடுத்து உழைச்சாங்க. முக்கியமா, படத்துல வில்லனா நடிச்ச பிரகாஷ் வர்மா சாருக்கு பெரிய நன்றிகளை இந்தப் பேட்டி மூலமா தெரிவிச்சுக்கிறேன்.

chippy ranjith

அவர், ஒரு விளம்பரப் பட இயக்குநர். ரொம்ப பிஸி. ஆனா, நாங்கக் கேட்டதுக்காக எல்லாத்தையும் ஒதுக்கி வெச்சுட்டு கால்ஷீட் கொடுத்தார். லாலேட்டனுக்கு இணையா பிரமாதமா நடிப்பை வழங்கியிருக்கார்னு படம் பார்த்த எல்லோருமே பாராட்டுறாங்க. அவரோட நடிப்பை நேர்ல பார்த்த எங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? மிரட்டிட்டார்னுதான் சொல்லணும்.

அதேமாதிரி, லாலேட்டன் நடிப்பை பற்றி சொல்லவேத் தேவையில்லை. ரொம்ப சின்சியர். 'துடரும்' படத்துக்கு நைட் ஷூட்தான் அதிகமா போச்சு. மழை சீன் நிறைய உண்டு. அதுவும், லாலேட்டனுக்குத்தான் மழை சீன்ஸ் அதிகம் வரும். அந்த மழையோடவே அவர் மட்டும் நின்னு, அவ்ளோ சின்சியரா நடிச்சுக்கொடுத்தார். அவருக்கு ஜுரம், உடல்நிலை பாதிப்புல்லாம் வந்துச்சு. அதைக்கூட எங்கக்கிட்ட காண்பிச்சுக்கிட்டதில்ல. இந்த நேரத்துல அவருக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லிக்கிறேன். லாலேட்டன், ஷோபனா அக்கா எல்லாரும் ஒரு ஃபேமிலி மாதிரிதான் இருந்தோம். மொத்த டீமோட உழைப்பாலதான், இந்த மாபெரும் வெற்றி சாத்தியமாச்சு”

"தமிழில் மெளனராகம் சீரியல் செம்ம ஹிட். அதுக்கப்புறம், ஏன் திரும்ப நடிக்கல? இதுக்கப்புறம் தமிழ்ல உங்களை எப்போ பார்க்கலாம்?"

"மலையாளத்துல 'வானம்பாடி' சீரியல் பெரிய ஹிட். அதை, நான்தான் தயாரிச்சு நடிச்சேன். தமிழ்லயும் பண்ணலாம்னு விஜய் டிவி கேட்டப்போ, உடனே 'மெளனராகம்' பண்ணினேன். நல்ல வரவேற்பு. இத்தனை வருசம் ஆகியும் என்னோட மல்லிகா கேரக்டரை தமிழ்நாட்டு மக்கள் இன்னமும் மறக்கவே இல்ல.

thudarum team

எங்க பார்த்தாலும் 'சக்தி அம்மா மல்லிகாதானே?'ன்னு ஆசையா வந்து கேட்கிறாங்க. தினமும் இருபது, முப்பது சீரியல்கள் போய்ட்டிருக்கு. ஆனா, மல்லிகா மக்களோட மனசுல இறங்கி நிற்கிறதுல ரொம்பவே சந்தோஷம்.

'மெளனராகம்' சீரியலுக்குப்பிறகு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலோட ரீமேக் 'சாந்தவனம்' மலையாளத்தில் எடுத்தோம். அதுவும், நல்ல வரவேற்பு. 1000 எபிசோடுகள் தாண்டிடுச்சு. நான், சுஜிதா பண்ணின அண்ணி கேரக்டர்ல நடிச்சேன். அது பண்ணி முடிச்சுட்டுத்தான் 'லவ் அண்டர் கன்ஸ்ட்ரக்‌ஷன்' தயாரிச்சேன்.

அந்த சீரிஸுக்கும் நல்ல பாராட்டு கிடைச்சது. அதுக்கப்புறம்தான், இந்தப் படம் பண்ணினோம். இன்னும் சீரியல் வாய்ப்பு, சினிமா வாய்ப்புகள் தமிழ்ல வந்துக்கிட்டுத்தான் இருக்கு. ஆனா, தயாரிப்புல பிஸியா இருக்கிறதால அந்த வாய்ப்புகளை என்னால பயன்படுத்திக்க முடியல. நல்ல கதையோட விரைவில் என்னை தமிழில் பார்க்கலாம். படம் தயாரிக்கவும் ரெண்டு, மூணு ஸ்கிரிப்ட் கேட்டுக்கிட்டிருக்கோம். எங்களோட அடுத்த படத்துல லாலேட்டன் கூட நடிக்கலாம். ஆனா, இன்னும் ஃபைனல் ஆகல."

"கன்னட சினிமாவில் முன்னணி நடிகை... மலையாளத்திலும் நிறைய படங்களில் நடிச்சிருக்கீங்க. ஆனா, தமிழில் ஒரேயொரு படம்தான்.. அதுக்கப்புறம். ஏன் தமிழ்ல நடிக்கல?"

“நான், கன்னடத்துல நல்ல படங்களில் நடிச்சிக்கிட்டிருந்தேன். அவார்டுகளும் வாங்கினேன். கன்னடத்துல ரொம்ப பிஸி. மலையாளத்திலும் நடிச்சுக்கிட்டிருந்தேன். அதனாலதான், தமிழ், தெலுங்குலயும் ஒரே படத்துலதான் நடிச்சிருக்கேன். இப்படி, பிஸியா இருந்ததால தமிழ்ல நடிக்கமுடியல”

chippy ranjith

"படத்தில் நன்றி கார்டில் ஆரம்பித்து படம் முழுக்க இளையராஜா சார் பாடல்களும் வசனங்களும் தொடர்கிறதே?"

“படத்துல எப்படி நிறைஞ்சிருக்காரோ, அப்படித்தான் எங்க இதயத்திலும் ராஜா சார் நிறைஞ்சிருக்கார். அதனாலதான், அவரோட பாடல்களை பயன்படுத்தணும்னு முடிவு பண்ணினோம். ஆனா, ராஜா சார்கிட்டே முறைப்படி அனுமதி வாங்கிணும்ங்கிறதுல தெளிவா இருந்தோம். அவரோட அப்பாய்ன்மென்ட்காகவும் எக்ஸைட்மென்ட்டா காத்துக்கிட்டிருந்தோம்.

அழைப்பு வந்ததும் உடனடியா சென்னை கிளம்பிட்டோம். மறக்கமுடியாத அற்புதமான சந்திப்பு அது. ராஜா சார்கிட்டே, படத்தோட ஹீரோ சண்முகம் (மோகன்லால்) கேரக்டர் உங்களோட ரசிகராத்தான் சார் வர்றார்ன்னு கதையைச் சொன்னோம். நாலஞ்சு இடத்துல உங்களோட பாடல்களும் வரும்னு தெரிவிச்சோம். கதை அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. கதையைக் கேட்கும்போதே ஹேப்பி ஆகிட்டார். ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட பாடல்களைப் பயன்படுத்திக்க அனுமதியும் கொடுத்தார். அவர்கிட்டே அனுமதி வாங்கி பாடல்களைப் பயன்படுத்தினதுல எங்களுக்கும் ரொம்ப சந்தோஷம்.

அதேமாதிரி, பாரதிராஜா சார் கிட்டேயும் கேட்டோம். அவர், நான் லாலேட்டன்கூட ஒரு சீன் நடிச்சாலே போதும்னு சந்தோஷமா நடிச்சுக்கொடுத்தார். விஜய் சேதுபதியிடமும் அவரோட போட்டோ பயன்படுத்திக்கக் கேட்டோம். சந்தோஷமா அனுமதி கொடுத்தார். எல்லோருக்குமே இந்த நேரத்துல நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்.

இளையராஜா

"உங்களோட கணவர் உங்களுக்கு எந்தளவுக்கு சப்போர்ட்டிவ்வா இருக்கார்?"

"எனக்கு பெரிய சப்போர்ட்டே அவர்தான். அவர், இல்லைன்னா நான் இல்ல. இதைத்தான் பண்ணனும் அதைத்தான் பண்ணணும்னு எதையுமே கட்டாயப்படுத்தவே மாட்டார். ரொம்ப ஃப்ரெண்ட்லி. என் பொண்ணு அவந்திகா, சிங்கப்பூர்ல எம்.எஸ்.சி படிக்கிறா. ஆனா, அவளுக்கு சினிமாவுல என்னைவிட நாலேஜ் அதிகம். எக்ஸிக்யூட்டிவ் புரடியூஸராவும் இந்தப் படத்துல ஒர்க் பண்ணியிருக்கா. நானும் அவளும் ரொம்ப ஃப்ரெண்ட்லி.

"அழகர், புத்தர், எடப்பாடி பழனிசாமி, என் மகள்!" - அப்பா ஆன சந்தோஷத்தில் நாஞ்சில் விஜயன்

'கலக்கப் போவது யாரு','அது இது எது' போன்ற நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகர் நாஞ்சில் விஜயனுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.முன்னதாக கடந்த 2023 செப்டம்பர் மாதம் இவருக்கும் மரியா என்பவர... மேலும் பார்க்க

செய்தி வாசிப்புக்கு முன்னும் பின்னும்; இவ்ளோ செய்துள்ளாரா பாத்திமா பாபு? |இப்ப என்ன பண்றாங்க பகுதி 8

ஒரு காலத்தில் ஸ்கிரீனில் பிஸியாக இருந்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்ட வங்க இவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா, சூழ்நிலையா தெரியாது. இப்போது மேக் அப் ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார்கள். ‘... மேலும் பார்க்க

Sundari Akka: "தள்ளுவண்டி டு குக் வித் கோமாளி போட்டியாளர்"- சுந்தரி அக்கா களமிறங்கிய பின்னணி இதுதான்

‘நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது... சிறகை விரித்துப் பறப்போம்...’ என்று சினிமாவில் முன்னேறுவதைப்போல நிஜவாழ்க்கையில் ஜெயித்துக்காட்டிய சுந்தரி அக்கா, தற்போது நட்சத்திரமாகவே ஜொலிக்க ஆரம்பித்... மேலும் பார்க்க

`பெண் குழந்தை என்பதில் பெரும் உற்சாகம்' - அம்மா ஆனார் 'நாதஸ்வரம்' ஶ்ரீத்திகா

'நாதஸ்வரம்' தொடர் மூலம் டிவியில் ரொம்பவே பிரபலமானவர் ஶ்ரீத்திகா.சீரியலில் நடித்துக் கொண்டே சினிமாவுக்கும் முயற்சி செய்து வருகிற இவர், சீரியல்கள் தாண்டி ஒருசிலபடங்களிலும் தலை காட்டியுள்ளார். சில ஆண்டுக... மேலும் பார்க்க

Cooku with Comali: `பிரச்னை முடிந்ததா!' - சமாதானம் பேசி அழைத்து வரப்பட்டாரா மதுமிதா?

விஜய் டிவிக்கு இது சமாதான சீசன் போல. பத்து ஆண்டுகளூக்கு முன் வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை குக்கு வித் கோமாளி சீசன் 6 ல் ஒரு குக்காக அழைத்து வந்திருக்கிறார்கள்.இது தொடர்பாக ல... மேலும் பார்க்க

``விக்ரமின் காசி திரைப்படத்தில் வில்லன்; மலையாள சீரியலில் ஹீரோ" - நடிகர் விஷ்ணு பிரசாந்த் மரணம்

நடிகர் விக்ரமின் நடிப்பில் வெளியான படம் காசி (2001). அந்தப் படத்தில் வில்லக் கதாப்பத்திரத்தில் நடித்திருப்பார் விஷ்ணு பிரசாத். இதுதான் அவரின் முதல் படம். ஆனால், பார்க்கும் எல்லோருக்கும் அவர் மீது வெறு... மேலும் பார்க்க