ஆபரேஷன் சிந்தூர் எப்படிப்பட்ட வெற்றி? போர் நிபுணர் அளித்திருக்கும் மாஸ் விளக்கம்...
விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் வெளியீட்டுத் தேதி மாற்றம்!
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான கிங்டம் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். அந்தப் படத்துக்கு பிறகு அதே அளவிற்கான வெற்றிப் படங்கள் எதுவும் அவருக்கு அமையவில்லை. இருப்பினும், மார்க்கெட் உள்ள நடிகராகவே நீடிக்கிறார்.
விஜய் தேவரகொண்டா கடைசியாக கல்கி 2898 ஏடி எனும் திரைப்படத்தில் அர்ஜுனர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது, ஜெர்ஸி படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். சமூக பிரச்னையை முன்வைத்து திரில்லர் பாணியில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றதுடன் இப்படம் மே 30 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவித்திருந்தனர். ஆனால், தற்போது கிங்டம் வருகிற ஜூலை 4 அன்று திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: சந்தாதாரர்களுக்கு அதிர்ச்சியளித்த அமேசான் பிரைம்!