சென்னை: தயார் நிலையில் 35 மின்சாரப் பேருந்துகள்; 20 இடங்களில் சார்ஜிங் மையங்கள் ...
"சிந்தூர்" வெற்றி: பிரதமருக்குப் பாராட்டுத் தெரிவித்த முதல்வர் தாமி!
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை வெற்றிகரமாக்கிய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாராட்டுத் தெரிவித்தார்.
டேராடூனில் திரங்கா சம்மன் யாத்திரையைக் கொடியசைத்துத் தொடங்கிய பின்னர் செய்தியாளர்களுடன் முதல்வர் தாமி பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்திய ஆயுதப்படைகள் தீர்க்கமான எதிர்த் தாக்குதலை நடத்தி, பாகிஸ்தானிலிருந்த ஒன்பது பயங்கரவாத தளங்களை அழித்து, பாகிஸ்தான் ராணுவத்தை மண்டியிட வைத்தது. இந்திய மக்கள் நமது ராணுவத்துடனும், நாட்டுடனும் ஒற்றுமையாக நின்று ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாடு தழுவிய திரங்கா யாத்திரையை பாஜக செவ்வாயன்று தொடங்கியது. இந்திய வீரர்களின் வீரத்தைக் கௌரவிப்பதையும், ஆப்ரேஷன் சிந்துரின் வெற்றியைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பதையும் இந்த யாத்திரை நோக்கமாகக் கொண்டுள்ளது. திரங்கா யாத்திரை மே 23 வரை தொடர உள்ளது.
அப்பாவி இந்தியக் குடும்பங்களைக் குறிவைப்பதன் விளைவுகளை ஆபரேஷன் சிந்துர் மூலம் பயங்கரவாதிகளுக்கு இந்திய ஆயுதப்படை உணர்த்தியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை வெற்றிகரமாக்கிய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
ஏப்ரல் 22ல் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குத் தீர்க்கமான ராணுவ பதிலடியாக மே 7ல் இந்தியா ஆபரேஷன் சிந்தூரை தொடங்கியது, அதில் 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள பயங்கரவாதத் தளங்களை இந்திய ஆயுதப்படைகள் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ்-ஏ-முகமது, லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.