செய்திகள் :

பஞ்சாப் கள்ளச்சாராய விவகாரம்: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

post image

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

அமிர்தசரஸின் மஜிதா பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிக்க மெத்தனால் எனும் வேதியல் பொருளைப் பயன்படுத்தியுள்ளனர். கடந்த மே.12 ஆம் தேதியன்று அதனை வாங்கிக் குடித்த எராளமானோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதில், நேற்று (மே 13) சுமார் 21 பேர் பலியான நிலையில் இன்று சிகிச்சை பெற்று வந்த மேலும், 2 பேர் பலியாகியுள்ளனர். இதனால், இந்தச் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்துடன், அந்தக் கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பனைச் செய்த முக்கிய குற்றவாளி மற்றும் அவரது கூட்டாளிகள் என மொத்தம் 10 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பலியானவர்கள் அனைவரும் அமிர்தசரஸ் மாவட்டத்திலுள்ள பங்கலி, படால்புரி, மராரி கலான், தல்வாண்டி கும்மன், கர்னாலா, பங்வான் மற்றும் தெரேவால் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் எனத் தெரியவந்துள்ளது.

முன்னதாக, பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான், பலியானவர்களின் குடும்பத்தினரை நேற்று (மே 13) சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனக் கூறியதுடன், அவர்களின் குழந்தைகளின் கல்விக்கான செலவை அரசே ஏற்கும் என உறுதியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:இந்திய பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி ரூ.23,622 கோடியாக உயர்வு!

காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ஷோப்பியன் மாவட்டத்தில் லஷ்கர் பயங்கரவாதிகள் மூன்று பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தெற்... மேலும் பார்க்க

கர்னல் சோஃபியா குறித்து சர்ச்சை: பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிய உத்தரவு!

கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சையாகப் பேசிய பாஜக அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப் பதிவு செய்ய மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சோஃபியா குரேஷியை, பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின... மேலும் பார்க்க

6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது மைக்ரோசாஃப்ட்!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில், 6 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது உலகளவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையில் 3% ஆகும... மேலும் பார்க்க

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கான பாதுகாப்பு அதிகரிப்பு!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பானது மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களினால் ... மேலும் பார்க்க

2 வது முறையாக அதிபர் டிரம்ப்-ஐ சந்திக்க கத்தார் பறந்தார் முகேஷ் அம்பானி!

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து 2வது முறையாக அவரைச் சந்திக்க முகேஷ் அம்பானி கத்தார் நாட்டுக்குச் சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அரசு முறைப் பயணமாக கத்தார் ந... மேலும் பார்க்க

இந்திய பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி ரூ.23,622 கோடியாக உயர்வு!

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ், இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி, இந்த 2024 - 25ஆம் நிதியாண்டில் ரூ.23,622 கோடியாக அதிகரித்துள்ளது.இதுவே கடந்த ஆண்டு ரூ.21,083 கோடியாக இருந்ததும், தற்ப... மேலும் பார்க்க