வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு
தக் லைஃப்: டிரைலர், இசை வெளியீட்டு விழா தேதிகள் அறிவிப்பு!
கமல் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் டிரைலர், இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ளார்கள்.இந்தப் படத்தில் த்ரிஷா, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலரும் நடித்துள்ளனர்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா மே.16ஆம் தேதி நடக்கவிருந்தது.
இந்தியா-பாகிஸ்தான் மோதலினால் இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மே.17ஆம் தேதி மாலை 5 மணிக்கு டிரைலர் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சாய்ராம் கல்லூரியில் இசை வெளியிட்டு விழா மே.24ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது குழுவினருடன் இணைந்து லைவ் ஃபர்பாமென்ஸ் செய்வார் எனவும் படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
#Thuglife#ThuglifeTrailer from May 17 #ThuglifeAudioLaunch from May 24#ThuglifeFromJune5#KamalHaasan#SilambarasanTR
— Magizhmandram (@magizhmandram) May 14, 2025
A #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan@SilambarasanTR_#Mahendran@bagapath@trishtrashers@AishuL_@AshokSelvan@abhiramiact… pic.twitter.com/kZeOMDnLXA