அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி... பிளஸ் 2 தேர்வில் 95.6% எடுத்து சாதனை!
விஜய் ஆண்டனியின் மார்கன் வெளியீட்டுத் தேதி!
விஜய் ஆண்டனி நடித்துள்ள புதிய படமான ‘மார்கன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கதாநாயகனாக தனது 12-வது படமான ‘ககன மார்கன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை விஜய் ஆண்டனியே சொந்தமாகத் தயாரித்து இசையமைத்துள்ளார்.
அட்டக்கத்தி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்துபோகும் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் எடிட்டரான லியோ ஜான் பால் இயக்கும் இந்தப் படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது.
பிரிகிடா கதாநாயகியாகவும், விஜய் ஆண்டனி சகோதரியின் மகன் அஜய் திஷன் வில்லனாகவும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படம் ஜூன் 27 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: விடாமுயற்சி, வீர தீர சூரன் வெற்றிப்படங்கள் இல்லை: திருப்பூர் சுப்ரமணியம்