செய்திகள் :

காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை!

post image

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ஷோப்பியன் மாவட்டத்தில் லஷ்கர் பயங்கரவாதிகள் மூன்று பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தெற்கு காஷ்மீரின் ஷோப்பியன் மாவட்டத்தின் சுக்ரு கெல்லர் பகுதியில் நேற்று (மே 13) சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தளபதியான ஷாஹித் குட்டே மற்றும் வந்துனா மெஹுரா பகுதியைச் சேர்ந்த அத்னான் ஷாஃபி மற்றும் புல்வாமாவைச் சேர்ந்த அஹ்சன் உல் ஹக் ஷேயிக் ஆகியோர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பலியான லஷ்கர் தளபதி ஷாஹித் குட்டேவின் தவறுதலான வழிகாட்டல்களினால் ஏராளமான காஷ்மீர் இளைஞர்கள் அவர்களது பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், பலியான மூன்று பயங்கரவாதிகளுக்கும் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், அவர்களிடமிருந்து இரண்டு ஏகே ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட மிகப் பெரியளவிலான ஆயுதக் குவியல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க:கர்னல் சோஃபியா குறித்து சர்ச்சை: பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிய உத்தரவு!

மீண்டும் படப்பிடிப்பில் ஆந்திர துணை முதல்வர்!

ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வர் பவன் கல்யான் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராக கடந்த 2024-ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்ட பிரபல நடிக... மேலும் பார்க்க

துருக்கி, அஜர்பைஜான் சுற்றுலா செல்வதற்கான முன்பதிவு 60% சரிவு!

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்கான முன்பதிவை இந்தியர்கள் ரத்து செய்துவருகின்றனர். சுற்றுலாத் தலங்களுக்காக பயணத்தை முன்பதிவு செய்யும் இணையதள செயல... மேலும் பார்க்க

அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி... பிளஸ் 2 தேர்வில் 95.6% எடுத்து சாதனை!

சண்டிகரில் அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி ஒருவர் பிளஸ் 2 தேர்வில் 95.6% மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். இளம் வயதிலேயே குடும்ப பிரச்னை காரணமாக அண்டை வீட்டைச் சேர்ந்தவர், மாணவி மீது அமிலத்தை வீ... மேலும் பார்க்க

கர்னல் சோஃபியா குறித்து சர்ச்சை: பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிய உத்தரவு!

கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சையாகப் பேசிய பாஜக அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப் பதிவு செய்ய மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சோஃபியா குரேஷியை, பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின... மேலும் பார்க்க

6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது மைக்ரோசாஃப்ட்!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில், 6 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது உலகளவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையில் 3% ஆகும... மேலும் பார்க்க

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கான பாதுகாப்பு அதிகரிப்பு!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பானது மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களினால் ... மேலும் பார்க்க