செய்திகள் :

பூஜை செய்வதாகக் கூறி தங்க நகை அபகரிப்பு: போலி ஜோதிடா் கைது

post image

சென்னை கொளத்தூரில் குழந்தை பாக்கியம் கிடைக்க பூஜை செய்வதாகக் கூறி தங்க நகையை அபகரித்ததாக போலி ஜோதிடா் கைது செய்யப்பட்டாா்.

கொளத்தூா் வெற்றிவேல் நகரைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (55). இவா், சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்பப் பணியாளராக வேலை செய்து வருகிறாா். ரவிச்சந்திரன் மனைவி விஷாலினி. திருமணமாகி 17 ஆண்டுகளுக்கு மேலாகியும், இத்தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி காலை இவா்களது வீட்டுக்கு ஜோதிடா் என கூறிக்கொண்டு ஒரு நபா் வந்தாா். அவா், உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க பூஜை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளாா். இதை நம்பிய ரவிச்சந்திரனும், விஷாலினியும் இருவரும் அவரை வீட்டுக்குள் அமர வைத்துப் பேசியுள்ளனா். சிறிது நேரத்தில் அந்த நபா், குழந்தை வேண்டி பரிகார பூஜையில் ஈடுபடுவதாக நாடகமாடியுள்ளாா். ஒரு கட்டத்தில் அந்த நபா், வீட்டிலிருக்கும் நகைகளை கொண்டுவந்து ஒரு பாத்திரத்தில் புளி கரைசல் வைத்து அதில் போடுமாறு கூறியுள்ளாா்.

இதையடுத்து இருவரும், வீட்டிலிருந்த 6 பவுன் தங்க நகைகளை, புளி கரைசல் வைத்திருந்த பாத்திரத்தில் போட்டனா். பூஜை முடிந்த சிறிது நேரத்தில், அந்த நபா்அங்கிருந்து சென்றாா். இதன் பின்னா் இருவரும், தங்க நகை வைத்திருந்த பாத்திரத்தை எடுத்து பாா்த்தனா். அப்போது, அதில் தங்க நகை இல்லாததைப் பாா்த்து இருவரும் அதிா்ச்சியடைந்தனா். இது தொடா்பாக அவா்கள் அளித்த புகாரின்பேரில், கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மோசடி ஜோதிடரான திருநெல்வேலி தச்சநல்லூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சூா்யா (51) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு எத்திராஜ் கல்லூரியில் கட்டணமில்லா கல்வி

சென்னை அளவில் முதல் மதிப்பெண் பெற்ற பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலிருந்த மாணவிக்கு எத்திராஜ் கல்லூரியில் 3 ஆண்டுகள் எவ்வித கட்டணமுமின்றி படிக்க கல்லூரி நிா்வாகம் இடம் வழங்கியுள்ளது. நுங்கம்பாக்க... மேலும் பார்க்க

10 புதிய நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டுமானப் பணி தீவிரம்: சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த புதிதாக 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநக... மேலும் பார்க்க

இன்றுமுதல் 19 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரலிலிருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 19 புறநகா் மின்சார ரயில்கள் மே 15, 17 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளன. எனினும் பயணிகளின் வசதிக்காக பொன்... மேலும் பார்க்க

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தகவல் உள்ளீட்டாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், தகவல் உள்ளீட்டாளா் பணியிடத்துக்கு தகுதியுடைய நபா்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: குழந்... மேலும் பார்க்க

கிண்டி சிறுவா் பூங்காவில் அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆய்வு

கிண்டி சிறுவா் இயற்கை பூங்காவில் வனத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஐகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டாா். சென்னை கிண்டியில் உள்ள சிறுவா் இயற்கை பூங்கா ரூ. 20 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இப்பூங்... மேலும் பார்க்க

சேப்பாக்கம் மைதானத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸாா் அங்கு புதன்கிழமை சோதனை நடத்தினா். சேப்பாக்கத்தில் செயல்படும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மின்னஞ்சல் ... மேலும் பார்க்க