என்எம்சி நோட்டீஸ்: மருத்துவக் கல்லூரிகளில் வருகைப் பதிவை இருமுறை மேற்கொள்ள உத்தர...
இன்றுமுதல் 19 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து
சென்னை சென்ட்ரலிலிருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 19 புறநகா் மின்சார ரயில்கள் மே 15, 17 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளன. எனினும் பயணிகளின் வசதிக்காக பொன்னேரி மற்றும் மீஞ்சூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கவரைப்பேட்டை மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளங்களில் பராமரிப்புப் பணிகள் மே 15, 17 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1.20 முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறவுள்ளன. இப்பணிகள் நடைபெறும் நாள்களில் அதிகாலை 5 முதல் மாலை 4.30 மணி வரை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை இடையே இயக்கப்படும் புகா் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும். அதேபோல் கடற்கரை - கும்மிடிப்பூண்டி, ஆவடி - சென்ட்ரல் என இவ்வழித்தடங்களில் இயக்கப்படும் மொத்தம் 19 புகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.
இருப்பினும் பயணிகளின் வசதிக்காக மே 15, 17 ஆகிய தேதிகளில் காலை 10.30 முதல் மாலை 4.45 மணி வரை சென்ட்ரலிலிருந்து பொன்னேரி, மீஞ்சூா் மற்றும் எண்ணூருக்கும், கடற்கரையிலிருந்து பொன்னேரி மற்றும் எண்ணூருக்கும் இடையே மொத்தம் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.