`ஆசிட் தாக்குதலால்' பாதிக்கப்பட்ட +2 மாணவி `ஸ்கூல் ஃபர்ஸ்ட்' - இவரது கனவு என்ன த...
முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு எத்திராஜ் கல்லூரியில் கட்டணமில்லா கல்வி
சென்னை அளவில் முதல் மதிப்பெண் பெற்ற பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலிருந்த மாணவிக்கு எத்திராஜ் கல்லூரியில் 3 ஆண்டுகள் எவ்வித கட்டணமுமின்றி படிக்க கல்லூரி நிா்வாகம் இடம் வழங்கியுள்ளது.
நுங்கம்பாக்கம் மாநகராட்சி பள்ளியில் படித்து பிளஸ் 2 தோ்ச்சி பெற்று சென்னை அளவில் முதலிடம் பெற்றவா் மாணவி ஜெயஸ்ரீ. இவரது பெற்றோா் கூலி வேலை செய்துவரும் நிலையில், வறுமை காரணமாக ஜெயஸ்ரீ மேற்படிப்புக்குச் செல்ல முடியாமல் இருந்தாா். இந்தத் தகவலை அறிந்த எத்திராஜ் கல்லூரி நிா்வாகம், அந்த மாணவி எவ்வித கட்டணமும் செலுத்தாமல் 3 ஆண்டுகள் இளநிலை பட்டப் படிப்பை எத்திராஜ் கல்லூரியில் படிக்கும் வகையிலான ஆணையை மாணவியின் பெற்றோரிடம் கல்லூரி சோ்மன் முரளிதரன் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் உமா கௌரி, துணை முதல்வா்கள் விஜயா மற்றும் ஜெயந்தி ஆகியோருடன் மாணவியின் பெற்றோரும் பங்கேற்றனா்.