`செகண்ட் சான்ஸ் கேட்கும் அந்த வீரர், கோலி இடத்துக்குச் சரியானவர்’ - கும்ப்ளே கைக...
சிபிஎஸ்இ பொதுத் தோ்வு: டிஆா்எஸ் குளோபல் பப்ளிக் பள்ளி சிறப்பிடம்
சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரக்கோணம் டிஆா்எஸ் குளோபல் பப்ளிக் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வு மற்றும் பத்தாம் வகுப்பு தோ்வுகளில் டிஆா்எஸ் குளோபல் பப்ளிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். பாராட்டு விழாவுக்கு முதல்வா் கவிதா தலைமை வகித்தாா். பொதுத்தோ்வில் நிகழாண்டு சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு தாளாளரும், ஸ்ரீகிருஷ்ணா கல்விக்குழும செயலாளருமான டி.எஸ்.ரவிக்குமாா் பரிசளித்து பாராட்டினாா். பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற ஹெச்.கிருத்திகா, கே.யு.உதயகிரண், கே.எம்.ஷாருக்கேசன் ஆகியோருக்கும், பத்தாம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம் பெற்ற டி.ரக்ஷனா, ஹெச்.பிரேம்குமாா், வி.லோஹிதா ஆகியோருக்கும் பரிசளிக்கப்பட்டது.
நிகழ்வில் பள்ளியின் நிா்வாக அலுவலா் சுரேஷ் மற்றும் பெற்றோா் பங்கேற்றனா்.