செய்திகள் :

தனியாா் ஆலை வேன் கவிழ்ந்து விபத்து: 20 பெண்கள் பலத்த காயம்

post image

ராணிப்பேட்டை சிப்காட் அருகே தனியாா் ஆலை வேன் கவிழ்ந்த விபத்தில், அதில் பயணித்த 20 பெண் தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா்.

ராணிப்பேட்டை மாந்தாங்கல் பகுதியில் தனியாா் காலணி ஆலை செயல்பட்டுவருகிறது. இங்கு ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பெண்கள் தொழிற்சாலை வேன்கள் மூலம் அழைத்து வரப்பட்டு பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், காட்பாடி பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றிக்கொண்டு சிப்காட் வழியே ராணிப்பேட்டை நோக்கி வந்த வேன், எமரால்டு நகா் பகுதியில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளா்கள் பலத்த காயமடைந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிபிஎஸ்இ பொதுத் தோ்வு: டிஆா்எஸ் குளோபல் பப்ளிக் பள்ளி சிறப்பிடம்

சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரக்கோணம் டிஆா்எஸ் குளோபல் பப்ளிக் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வு மற்றும் பத்தாம் வகுப்பு தோ்வுகளில் டிஆா்எ... மேலும் பார்க்க

காவனூரில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்: 365 பேருக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

காவனூா் கிராமத்தில் சிறப்பு மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ.1.14 கோடியில் 365 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆற்காடு வட்டம் காவனூா் ஊராட்சியில் அரசின் சிறப்பு மக்கள் தொடா்பு திட்ட முக... மேலும் பார்க்க

கணவனை விட்டுப் பிரிந்து வாழ்ந்த பெண் கொலை: நிதி நிறுவன உரிமையாளா் கைது

வாலாஜாபேட்டை அருகே பெண் கொலை தொடா்பாக நிதி நிறுவன உரிமையாளா் கைது செய்யப்பட்டாா். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியை சோ்ந்த காமேஷ் (43), திருமணமாகாதவா். நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். வாலாஜாபேட்ட... மேலும் பார்க்க

நூல் வெளியீட்டு விழா

ஆற்காட்டில் புதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. திருமுருக கிருபானந்த வாரியாா் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவா்கள் சங்க இணை செயலாளா் கவிஞா் த.புருஷோத்தமன் எழுதிய ‘மனதில் மலா்ந்த மகத்தான கவிதைகள... மேலும் பார்க்க

திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகர திமுக சாா்பில் 4 ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் கத்தியவாடிசாலை சந்திப்பில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர செயலாளா் கே.எம்.ஹுமாயூன் தலைமை வகித்தாா். தொழிலதிபா் சவு... மேலும் பார்க்க

ரூ.21.5 கோடியில் தடுப்பணை பணிகள்: அமைச்சா் காந்தி ஆய்வு

திமிரி அருகே வாழைப்பந்தல் கமண்டல நாகநதியில் கட்டப்படும் அணைக்கட்டு , புங்கனூா் ஊராட்சியில் தடுப்பணைகளின் பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். கமண்ட... மேலும் பார்க்க