செய்திகள் :

சென்னை இஸ்கான் நடத்தும் நற்பண்புக் கல்வி வகுப்புகள்!

post image

குழந்தைகள் மற்றும் பதின் பருவ வயதினர்களின் ஆன்மீக மற்றும் நல்லொழுக்க வளர்ச்சிக்காக, தனித்துவமான வாராந்திர நற்பண்பு கல்வித் திட்டத்தை சென்னை இஸ்கான் நடத்துகிறது.

இந்த வகுப்புகள் ஜூன் 2025 மத்தியில் தொடங்கி மார்ச் 2026 வரை, வாரம் ஒருமுறை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வகுப்பும் ஒன்றரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

'' நற்பண்புக் கல்வி வகுப்புகள் ஆன்லைனிலும், மற்றும் சென்னையின் பல்வேறு இடங்களில் நேரடியாகவும் நடத்தப்படுகிறது. பயிற்சி மொழி ஆங்கிலம் அல்லது தமிழ் ஆகும். வெவ்வேறு நாள்களில், வெவ்வேறு நேரங்களில் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

'நவவித பக்தி' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, கடவுள் மீதான பக்தி, நல்லொழுக்கம் மற்றும் பாரம்பரியத்தை மாணவர்களிடம் வளர்க்கும் நோக்குடன் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதன் மூலம் குழந்தைகளின் கவனம் மற்றும் நினைவாற்றல் மேம்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

''வயதினருக்கு ஏற்ப பயிற்றுவிக்கும் முறையானது வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் (6 முதல் 12 வயது வரை) கதைகள், வினாடி வினா, ஸ்லோகங்கள், பஜனை, நெருப்பில்லா சமையல், கலை மற்றும் கைவினைகள் மூலம் கற்பிக்கப்படுகிறது.

பதின்ம வயதினர்களுக்கு (13 முதல் 17 வயது வரை) கதைகள், விவாதங்கள், கலந்துரையாடல்கள், மன வரைபடம், மற்றும் ஒரு நிமிட உரை போன்ற பயிற்சிகளின் மூலம் கற்பிக்கப்படுகிறது.

பங்கேற்பாளர்களுக்கு பாட சம்பந்தப்பட்ட ஆவணங்கள், காணொளிகள் ஆகியவை கூகுள் வகுப்பறை மூலம் வழங்கப்படும். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். பதிவு செய்ய குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. www.iskconchennai.org/bpss என்ற இணையதளப் பக்கத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு, 8072599295 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்ருட்டி: 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நுண் கற்காலக் கற்கருவி கண்டெடுப்பு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான நுண் கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டன.இதைக் குறித்து தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது:நுண் கற்காலக் கருவியின் பய... மேலும் பார்க்க

மனைவியின் கள்ளக்காதல் மாமியார் உள்பட 3 பேரை கொன்று கணவர் வெறிச்செயல்

ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்த மனைவி செய்த கள்ளக்காதல் துரோகத்தை தாங்க முடியாத கணவர் மாமியார், சித்தப்பா, சித்தி ஆகிய 3 பேரையும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்ப... மேலும் பார்க்க

பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து மோதி 15 மாடுகள் பலி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து மோதி 15 நாட்டு மாடுகள் பலியானது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தனசேகரன். நாட்டு மாடுகளை வளர்த்து வரும் இவர், பெரியகுள... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் குறிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஆளுநரின் வழக்கு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பி கூடுதல் விளக்கம் கேட்டிருப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஆளுநர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்ட குடியரசுத் தலைவர்!

புது தில்லி: தமிழ்நாடு ஆளுநர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அ... மேலும் பார்க்க

கடலூர் சிப்காட்டில் கழிவுநீர் டேங்க் வெடித்து விபத்து: 20 பேர் மருத்துவமனையில் அனுமதி

கடலூர் சிப்காட்டில் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத கழிவுநீர் டேங்க் திடீரென வெடித்தில் 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், முதுநகர் அருகே உள்ள சிப்கா... மேலும் பார்க்க