சுருங்கி வரும் மன்னாா் வளைகுடா தீவு! ரூ.50 கோடியில் மறுசீரமைக்க நடவடிக்கை!
Trump: "இந்தியா - பாக். பிரச்னையை நான்தான் சரிசெய்தேன் என்று கூறவில்லை, ஆனால்..." - ட்ரம்ப்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியான இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூருக்கு' பின், பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு, இந்தியாவும் தாக்குதல் நடத்த... இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மிகுந்த பதற்ற நிலை உண்டானது.
மே 7-ம் தேதி தொடங்கிய இந்தப் பதற்ற நிலை, மே 10-ம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்தது. ஆனால், அமைதி பேச்சுவார்த்தையை இந்த இரு நாடுகள் அறிவிப்பதற்கு முன்பு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முந்திகொண்டார்.
'நான் தான் இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் நடத்தினேன்' என்ற தொனியிலும் பேசிவந்தார். அதாவது, ``இரு நாடுகளும் சண்டையை நிறுத்தவில்லை என்றால் அமெரிக்கா இரு நாடுகளுடனும் வர்த்தகம் செய்யாது என்று கூறினேன். அதனால், சமாதனம் அடைந்துவிட்டார்கள்" என்று கூறினார்.

ட்ரம்பின் இந்தப் பேச்சுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இந்த நிலையில், மத்திய கிழக்காசிய நாடுகளில் பயணம் மேற்கொண்டுவரும் ட்ரம்ப், இது குறித்துப் பேசியிருக்கிறார்.
அவர் தற்போது, "இரு நாடுகளுக்கும் இடையே நான் தான் சமரசம் செய்தேன் என்று கூறவில்லை. ஆனால், அந்தப் பதற்றத்தைக் குறைப்பதில் நான் முக்கிய பங்காற்றினேன்" என்று கூறியிருக்கிறார்.