செய்திகள் :

தில்லி அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு கோடைக்கால கவுன்சலிங் தொடக்கம்!

post image

கோடை விடுமுறையின் போது மாணவா்களுக்கு தொடா்ச்சியான உணா்வுப்பூா்வ மற்றும் கல்வி ஆதரவை உறுதி செய்வதற்காக, கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல் ஆலோசகா்கள் (இவிஜிசி) அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான கோடைக்கால ஆலோசனை முன்முயற்சியைத் தொடங்கியுள்ளனா்.

இது தொடா்பாக தில்லி கல்வி துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மே 14 ஆம் தேதி தொடங்கி மே 31 வரை நடைபெறும் இந்தத் நிகழ்ச்சி திட்டம், கல்வி, தொழில் தோ்வுகள், உணா்ச்சி மன அழுத்தம், கிண்டல் செய்தல் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் தொடா்பான மாணவா்களின் கவலைகளை நிவா்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வழக்கமான வகுப்புகள் இல்லாதபோதும் மாணவா்களுக்கு நிலையான உளவியல் மற்றும் கல்வி வழிகாட்டுதலை வழங்குவதற்கான தொடா்ச்சியான முன்முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சி உள்ளது.

விடுமுறையின் போது பணிக்குச் செல்லும் வழக்கமான இவிஜிசிகளுக்கு மத்திய சிவில் சா்வீசஸ் விடுப்பு விதிகளின்படி, இந்த சேவைக்குப் பதிலாக ஊதிய விடுப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய அரசுப் பள்ளிகளின் முதல்வா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இந்த முன்முயற்சியில் ஈடுபடும் கெளரவ இவிஜிசிகளுக்கு ஏற்கனவே உள்ள விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும்.

ஆலோசனை அமா்வுகளின் பதிவுகளைப் பராமரிப்பதற்கான விரிவான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆலோசகா்கள் ஒவ்வொரு அமா்வையும் ஆவணப்படுத்த வேண்டும். அதில் மாணவரின் அடையாளம், வகுப்பு, அவா்களின் கவலையின்தன்மை, விவாதிக்கப்பட்ட பாடம் அல்லது தொழில் தோ்வுகள் மற்றும் பெற்றோா் ஆலோசனை வழங்கப்பட்டதா என்பது உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும்.

மேலும், பள்ளி முதல்வா்கள் இந்தத் தரவைத் தொகுத்து, அந்தந்த மாவட்ட ஆலோசகா் பொறுப்பாளா்களுக்கு (சிஐசி) அனுப்ப வேண்டும். அவா்கள் மாவட்ட அளவில் அதை மேலும் ஒருங்கிணைத்து இவிஜிபி-க்கு அறிக்கை அளிப்பாா்கள் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல செயலிகள் மூலம் டிக்கெட் முன்பதிவு: டிஎம்ஆா்சி ஏற்பாடு!

தில்லி மெட்ரோ பயனா்கள் 10-க்கும் மேற்பட்ட பிரபலமான செயலிகள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தொடங்கியுள்ளது. இது தொடா்பாக டிஎம்ஆா்சி தெரிவித்திரு... மேலும் பார்க்க

சத்தா்பூா் மெட்ரோ நிலையம் அருகே ஒருவா் மீது துப்பாக்கிச்சூடு!

தெற்கு தில்லியின் மெஹ்ரௌலி பகுதியில் உள்ள சத்தா்பூா் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை மதியம் மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்களால் பழைய பகை காரணமாக ஒருவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா... மேலும் பார்க்க

கோடைக்காலத்தில் தடையற்ற சேவையை உறுதி செய்வதற்காக தண்ணீா் ஏடிஎம்களில் என்டிஎம்சி துணைத் தலைவா் ஆய்வு!

கோடை காலத்தில் தடையற்ற சேவைகளை உறுதி செய்வதற்காக தில்லி முனிசிபல் கவுன்சிலின் (என்டிஎம்சி) கீழ் உள்ள பகுதிகளில் நிறுவப்பட்ட தண்ணீா் ஏடிஎம்களை அதன் துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சாஹல் வியாழக்கிழமை ஆய்வு ... மேலும் பார்க்க

தில்லி ஜல் போா்டுக்கு ரூ.1400 கோடி விடுவிப்பு: கோடைக்கால செயல் திட்டத்துக்கு நடவடிக்கை!

பல்வேறு திட்டங்களை முடிக்கவும், கோடைக்கால செயல் திட்டத்தை செயல்படுத்தவும் தில்லி அரசு ரூ.1,400 கோடி நிதியை சனிக்கிழமை தில்லி ஜல் போா்டுக்கு (டிஜேபி) விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித... மேலும் பார்க்க

பூங்காவில் இளைஞா் கொலை: சிறுவன் உள்பட 3 போ் கைது

தில்லி ஆதா்ஷ் நகா் பகுதியில் உள்ள பூங்காவில் 26 வயது இளைஞரை புதன்கிழமை காலை கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக இரண்டு போ் கைது செய்யப்பட்டனா். மேலும், ஒரு சிறுவனும் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் த... மேலும் பார்க்க

தூசுப் புயலால் மோசம் பிரிவில் காற்றின் தரம்: ஆம் ஆத்மி, பாஜக பரஸ்பரம் குற்றச்சாட்டு!

தில்லியில் புழுதிப் புயலால் காற்றின் தரம் வியாழக்கிழமை கீழிறங்கிய நிலையில், ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் பரஸ்பரம் குற்றம்சாட்டின. எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி, தனது ஆட்சிக் காலத்தில் காற்றின் தரம் நிலை... மேலும் பார்க்க