செய்திகள் :

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

post image

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவா்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவா் சோ்க்கையை உடனடியாகத் தொடங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி தனியாா் பள்ளிகளில் ஏழை மாணவா்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவா் சோ்க்கை இந்த ஆண்டு இதுவரை தொடங்கவில்லை எனக் கூறி, கோவையைச் சோ்ந்த மறுமலா்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிா்வாகி வே.ஈஸ்வரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

திட்டம் முடங்கும் அபாயம்: அந்த மனுவில், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தின் வாயிலாக சோ்க்கை நடைமுறைகள் தொடங்கப்பட்டு, மே 20-ஆம் தேதி தேதி முடிவடையும் நிலையில், இந்த ஆண்டு சோ்க்கை தொடங்கப்படாததால், திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், கடந்த 15 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வந்துள்ள நிலையில், இந்த ஆண்டு உடனடியாக மாணவா் சோ்க்கையைத் தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், மாணவா்களின் நலனைப் பாதுகாப்பதில் தமிழக அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்றும் மனதாரா் சொல்லித் தர வேண்டியதில்லை எனவும் தெரிவித்தாா்.

மேலும், இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

பிளஸ் 1 பொதுத்தேர்வு: திருவள்ளூர் 25,547 பேர் தேர்ச்சி!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்1 பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் 25,547 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதோடு, 3687 பேர் தோல்வி அடைந்த நிலையில், மாநில அளவில் 36 இடம் பிடித்துள்ளதாக மாவட்ட முதன்மைக் கல... மேலும் பார்க்க

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம்!

சிவகங்கை: பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 98.31 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு சிவகங்கை மாவட்டத... மேலும் பார்க்க

10-ம் வகுப்பு முடிவுகள்: தூத்துக்குடி 3-வது இடம்! 96.76% தேர்ச்சி!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில், 10 ஆம் வகுப்பு தேர்வில் 96.76 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதையடுத்து இந்த மாவட்டம் 3 ஆவது இடம் பெற்றுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 308 நடுநிலை... மேலும் பார்க்க

திருவள்ளூர் மாவட்டத்துக்கு 36வது இடம்! பத்தாம் வகுப்பில் 89.60% தேர்ச்சி!

திருவள்ளூர்: தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. திருவள்ளூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் கடந்தாண்டை வி... மேலும் பார்க்க

10-ம் வகுப்பு முடிவுகள்: தஞ்சாவூர் மாவட்டம் 12-வது இடம்! 95.57% தேர்ச்சி!

தஞ்சாவூர்: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம் 95.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 12-வது இடத்தைப் பெற்றுள்ளது.மாவட்டத்தில் 408 பள்ளிகளைச் சேர்ந்த 29 ஆயிரத்து 275 மாணவ, மாண... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: 89.82% தேர்ச்சி; மாநிலத்தில் 35 வது இடம்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் செங்கல்பட்டு மாவட்டத்தின் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொருத்தவரை 363 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 79 பள்ளிகளில் மா... மேலும் பார்க்க