செய்திகள் :

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம்!

post image

சிவகங்கை: பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 98.31 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 278 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 105 மையங்களில் தேர்வு எழுதினர்.

8,070 மாணவர்கள், 8,809 மாணவிகள் என மொத்தம் 17,679 பேர் இத்தேர்வு எழுதினர். இதில் 8,662 மாணவர்கள், 8,718 மாணவிகள் என மொத்தம் 17,380 பேர் தேர்ச்சி பெற்றனர்.

98.31% தேர்ச்சி விகிதம் பெற்று சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்தது. அரசுப் பள்ளிகளிலும் 97.49% சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்தது.

அரசு பள்ளிகள் 79 பள்ளிகள் உள்பட மொத்தம் 17 5பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன. கடந்த 2023ம் ஆண்டு 97.02 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தது.

தொடர்ந்து 2024ம் ஆண்டும் 97.53 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும் பிடித்த நிலையில் இந்த ஆண்டு மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில் அநேக இடங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர்காஞ்சிபுரம்விழுப்புரம்கடலூர்திருச்சிஅரியலூர்பெரம்பலூர்தஞ... மேலும் பார்க்க

மே 29, 30-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னையில் மே 29, 30-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

மதுரையில் மழை! தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்கிறது?

கோடை வெய்யில் கொளுத்திவந்த நிலையில், இன்று பிற்பகலில் மதுரையில் பரவலாக மழை பெய்துள்ளது. மேலும் பார்க்க

ஊட்டத்தூர் கோயிலில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு கண்டெடுப்பு!

ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை சுற்றுலா, பண்பாடு மற்... மேலும் பார்க்க

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை!

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூ... மேலும் பார்க்க

10ஆம் வகுப்பில் ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டைச் சகோதரிகள்!

கோவை : கூலித் தொழிலாளியின் இரட்டை மகள்கள் ஒரே மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். அருமையான வெற்றி என கொண்டாடி மகிழ்கிறார்கள் பெற்றோரும் உறவினர்களும்.கோவை மாவட்டம், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கூலி வேலை ... மேலும் பார்க்க