புதுப்பிக்கப்பட்ட வள்ளுவா் கோட்டம்: 15 நாள்களில் திறக்க ஏற்பாடு தீவிரம்
ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை!
ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் கடந்த 3 ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும்நிலையில், இறுதியாக பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் ஈடுபட்டன.
ரஷிய அதிபரோ உக்ரைன் அதிபரோ இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்காத நிலையில், 2 மணிநேரத்துக்குள்ளாகவே பேச்சுவார்த்தை முடிவு பெற்றது. இருப்பினும், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் தென்பட்டதாகத் தெரியவில்லை என்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் கூறுகிறது.
துருக்கியில் உள்ள இஸ்தான்புலில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் வெலோதிமீர் ஸெலென்ஸ்கி ஆகிய இருவரும் பங்கேற்கவில்லை. மாறாக, இரு நாட்டு பிரதிநிதிகளும்தான் கலந்துகொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ரஷிய படைகளைத் திரும்பப் பெறுவதற்கு ஈடாக, சில ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை அந்நாட்டு பிரதிநிதிகள் முன்வைத்ததாக உக்ரைனிய அதிகாரி தெரிவித்தார். மேலும், இந்தப் பேச்சுவார்த்தையில், இரு நாடுகளும் 1,000 போர்க் கைதிகளை பரிமாறிக் கொள்ள ஒப்புக் கொண்டன.
பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, வெலோதிமீர் ஸெலென்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மன் அதிபர் பிரெட்சிக் மெர்ஸ், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் ஆகியோர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு தொலைபேசி வாயிலாக விவாதித்தனர். இருப்பினும், இந்த உரையாடல் குறித்து எந்த தகவலும் பெறப்படவில்லை.
முன்னதாக, இந்த பேச்சுவார்த்தை குறித்து ஸெலென்ஸ்கி கூறியதாவது, ``இஸ்தான்புல்லில், இன்று ரஷிய பிரதிநிதிகளால் போர்நிறுத்தத்தை ஒப்புக்கொள்ள முடியாவிட்டால், புதின் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடவடிக்கையாக இராஜதந்திரத்தை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறார் என்பது நூறு சதவிகிதம் தெளிவாக தெரிந்து விடும்’’ என்று தெரிவித்தார்.