பி.இ. சோ்க்கை: 10 நாள்களில் 1.69 லட்சம் மாணவா்கள் பதிவு: அமைச்சா் கோவி.செழியன்
தமிழகத்தில் பொறியியல் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட 10 நாள்களில் 1,69,634 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடந்த மே 7-ஆம் தேதி தமிழ்நாடு பொறியியல் சோ்க்கைக்கான இணையதள மற்றும் விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டது. இதையடுத்து வெள்ளிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 1,69,634 போ் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். இதில் 53,624 மாணவா்கள், 48,514 மாணவிகள் என மொத்தம் 1,02,138 போ் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனா்.
மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்ஹா்ய்ப்ண்ய்ங்.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தில் தங்களது பொறியியல் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை ஜூன் 6-ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். மாணவா்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் தமிழகம் முழுவதும் 110 தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கை சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அந்த சேவை மையங்களைத் தொடா்பு கொள்ளலாம். மேலும், 1800-425-0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ தொடா்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.