செய்திகள் :

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜசுவாமி கோயில் தேர்த் திருவிழா

post image

அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவித்தாயார் சமேத வரதராஜசுவாமி கோயில். இக்கோயில் சித்திரைத் திருவிழா நிகழ்மாதம் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 3-வது நாள் நிகழ்ச்சியாக தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் வரதராஜசுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி, அதிகாலையில் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் உற்சவர் வரதராஜசுவாமி ஆலயத்திலிருந்து கொண்டை முடிச்சு அலங்காரத்தில் ராஜநடையுடன் தேருக்கு எழுந்தருளினார். இதன்பின்னர் தேரோட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

தேரோட்டத்தையொட்டி, பக்தர்களின் பாதுகாப்பு கருதி நகரில் பல இடங்களில் குடிநீர் தொட்டிகள், கழிப்பறை வசதிகள் ஆகியனவும் செய்யப்பட்டிருந்தன. நகரில் உயர் கோபுரங்கள் அமைத்தும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் தேர்த்திருவிழாவின்போது காலையில் தேர் புறப்படுவதற்கு முன்பாக பக்தர்கள் தேரில் ஏறி சுவாமியை தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வந்தது. இந்த ஆண்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி தேர் மாலையில் நிலைக்கு வந்து சேர்ந்தவுடன் பக்தர்கள் தேரில் ஏறிச் சென்று சுவாமியை தரிசிக்க காவல்துறை ஏற்பாடு செய்திருந்தது.

தேர் வரும் வழிநெடுகிலும் வணிக நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் பலரும் அன்னதானம், மோர், இனிப்பு வழங்கினார்கள். தேரோட்டத்தையொட்டி நகரில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

தேர்த்திருவிழாவில் காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஆட்சியர் (பயிற்சி) ந.மிருணாளினி, அறநிலையத்துறை இணை ஆணையர் குமாரதுரை, உதவி ஆணையர் ராஜலட்சுமி, அறநிலையத்துறை செயலாளர்கள், அரசு அதிகாரிகள் பலரும் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் காணித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக (இன்று) தமிழகத்தில் ஒரு... மேலும் பார்க்க

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடக்கம்!

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் சனிக்கிழமைகளில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று(சனிக்கிழமை) தொடக்கி வைத்தார்.தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் பக்... மேலும் பார்க்க

மே 22ல் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

அரபிக்கடல் பகுதியில் வரும் 22 ம் தேதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது மத்திய கிழக்கு கர்நாடகத்தை ஒட்டிய அரபிக்கடல... மேலும் பார்க்க

பாடி மேம்பாலம் அருகே டிப்பர் லாரி மோதியதில் தாய், குழந்தை பலி!

சென்னை: சென்னை பாடி மேம்பாலம் அருகே, டிப்பர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண்ணும் குழந்தையும் பலியான நிலையில், பெண்ணின் கணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

சென்னை புறநகரில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி!

சென்னை புறநகர்ப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மே 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் என்ற கத்தரி வெய்யில் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. தொடர்ந்து மே 28 வரை ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (சனிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது மாலை 4 மணி வரைதிருவள... மேலும் பார்க்க