செய்திகள் :

டாஸ்மாக் வழக்கில் அரசு ஊழியர்களைத் துன்புறுத்தும் அமலாக்கத் துறை! - அமைச்சர் சு. முத்துசாமி கண்டனம்

post image

அரசியல் உள்நோக்கத்தோடு சோதனை மேற்கொண்டு தமிழ்நாடு அரசு ஊழியர்களை அமலாக்கத் துறை துன்புறுத்தி வருவதாக அமைச்சர் சு. முத்துசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு புகாா் தொடா்பான வழக்கில், சென்னையில் உள்ள அந்த நிறுவன மேலாண்மை இயக்குநா் விசாகனின் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

இந்நிலையில் இது தொடர்பாக வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  சு. முத்துசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"சென்ற அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை  அடிப்படையாகக் கொண்டு, தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதைப் போன்று சித்தரிப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்தோடு, கடந்த மாதம் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனைகளை மேற்கொண்டது.

இந்த சோதனைகளின்போது, டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடைபெற்றதற்கான எந்தவிதமான ஆதாரமும் கிடைக்காத நிலையில், ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக ஒரு கற்பனைச் செய்தியை அமலாக்கத் துறை வெளியிட்டது.  இவ்வாறு வெளியிட்ட தவறான அறிக்கையை நியாயப்படுத்துவதற்காக, அமலாக்கத் துறை டாஸ்மாக் நிறுவன அலுவலர்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிலருடைய வீடுகளில் சோதனைகளை அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ளது. 

இந்த சோதனைகளின்போதும், எந்தவிதமான ஆதாரங்களும் கிடைக்காத நிலையில், அரசு அலுவலர்களை அமலாக்கத் துறை தொடர்ந்து துன்புறுத்தியும், கட்டாயப்படுத்தியும் வருகிறது. 

பல அமலாக்கத் துறை வழக்குகளில், உச்சநீதிமன்றம் விதித்துள்ள வழிமுறைகளைத் தொடர்ந்து மீறி, இவ்வாறு அமலாக்கத் துறை மேற்கொண்டுவரும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பாக எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகத் தேவையான அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, நமது அலுவலர்களுடன் தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!

அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிவு!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஆரணி தொகுதி எம்எல்ஏவ... மேலும் பார்க்க

சென்னை இஸ்கான் நடத்தும் நற்பண்புக் கல்வி வகுப்புகள்!

குழந்தைகள் மற்றும் பதின் பருவ வயதினர்களின் ஆன்மீக மற்றும் நல்லொழுக்க வளர்ச்சிக்காக, தனித்துவமான வாராந்திர நற்பண்பு கல்வித் திட்டத்தை சென்னை இஸ்கான் நடத்துகிறது.இந்த வகுப்புகள் ஜூன் 2025 மத்தியில் தொடங... மேலும் பார்க்க

பண்ருட்டி: 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நுண் கற்காலக் கற்கருவி கண்டெடுப்பு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான நுண் கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டன.இதைக் குறித்து தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது:நுண் கற்காலக் கருவியின் பய... மேலும் பார்க்க

மனைவியின் கள்ளக்காதல் மாமியார் உள்பட 3 பேரை கொன்று கணவர் வெறிச்செயல்

ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்த மனைவி செய்த கள்ளக்காதல் துரோகத்தை தாங்க முடியாத கணவர் மாமியார், சித்தப்பா, சித்தி ஆகிய 3 பேரையும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்ப... மேலும் பார்க்க

பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து மோதி 15 மாடுகள் பலி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து மோதி 15 நாட்டு மாடுகள் பலியானது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தனசேகரன். நாட்டு மாடுகளை வளர்த்து வரும் இவர், பெரியகுள... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் குறிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஆளுநரின் வழக்கு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பி கூடுதல் விளக்கம் கேட்டிருப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ... மேலும் பார்க்க